“அவங்கள எங்க கஸ்டடில விடுங்க”... சூடு பிடிக்கும் ‘ஸ்வப்னா சுரேஷ்’ விவகாரம்.. பரபரப்பை ‘கிளப்பும்’ பகீர் திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் விவகாரம் பெரும் அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

“அவங்கள எங்க கஸ்டடில விடுங்க”... சூடு பிடிக்கும் ‘ஸ்வப்னா சுரேஷ்’ விவகாரம்.. பரபரப்பை ‘கிளப்பும்’ பகீர் திருப்பம்!

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் தனித்தனியே அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. அந்த புகாரில் ஸ்வப்னா சுரேஷ்,  சந்தீப் நாயர், ஃபைசல் பரீத், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரீத் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரித்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக கருதப்படும் ஃபைசல் பரீத்தை துபாய் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதேசமயம் சுரேஷ், உள்ளிட்ட சிலரின் நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 17 பேர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, அவரை தங்கள் கட்டுப்பாட்டில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டுள்ளது.

எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இது பற்றி மனு தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறையின் இந்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், அன்றைய தினம் ஸ்வப்னா சுரேஷ் ஆஜர்படுத்தப்படும் போது, அவரை சுமார் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதி அமலாக்கத் தரப்பில் இருந்து கோரப்படும் என்று தெரிகிறது. எனினும் விசாரணையை பொருத்தது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்