களவுபோன நகைகள்.. திருடுனவரை கண்டுபிடிக்க மந்திரவாதியை அழைத்த ஹவுஸ் ஓனர்.. நடு இரவுல கேட்ட பயங்கர சத்தம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் காணாமல் போன நகைகளை திருடியதாக கூறி, வீட்டு பணிப்பெண் ஒருவரை துன்புறுத்திய வீட்டு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
Also Read | 75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. அலைமோதிய கூட்டம்.. பிரியாணியுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய மக்கள்..!
டெல்லியின் சாத்பரி பகுதியை சேர்ந்தவர் குல்ரேஜ். இவருடைய வீட்டில் பணிபுரிந்து வருகிறார் 43 வயதான அந்த பெண்மணி. சமீபத்தில் குல்ரேஜ்-ன் வீட்டில் இருந்து சில நகைகள் காணாமல் போயிருக்கிறது. இதனையடுத்து, தனது பணியாளர்களை அழைத்து இதுபற்றி கேட்டிருக்கிறார் அவர். ஆனால், நகையை கண்டுபிடிக்க முடியாததால் தனது உறவினரின் ஆலோசனைப்படி மந்திரவாதி ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் அவர்.
பரிசோதனை
காணாமல்போன நகைகளை கண்டுபிடிக்க சில பரிசோதனைகளை செய்ய இருப்பதாக அந்த மந்திரவாதி தெரிவித்திருக்கிறார். அதன்படி அந்த வீட்டில் பணிபுரியும் நபர்களின் வாயில் அரிசியையும் சுண்ணாம்பையும் போட சொல்லியிருக்கிறார். யாருடைய வாய் சிவக்கிறதோ அவரே நகைகளை திருடியவர் அந்த மந்திரவாதி சொல்ல, வீட்டின் உரிமையாளரான குல்ரேஜ்-ம் அப்படியே செய்திருக்கிறார்.
சற்று நேரத்தில் 43 வயதான பணிப்பெண்ணின் வாய் சிவக்கவே, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவருடைய கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டினர் தாக்கியுள்ளனர். மேலும், திருட்டை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர். அவர் தொடர்ந்து மறுக்கவே, இரவு முழுவதும் வீட்டின் உரிமையாளர் அவரை தாக்கியுள்ளார்.
புகார்
இதனையடுத்து, சித்திரவதையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, பாதிக்கப்பட்ட பெண் திருடியதை ஒப்புக்கொண்டதுடன், திருடப்பட்ட நகைகளை தனது கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, குல்ரேஜ் தனது கணவரை அந்தப் பெண்ணுடைய வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இடையே வலியை தாங்கிக்கொள்ள முடியாத அந்த பெண் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குல்ரேஜ், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அப்போது காவல்துறையினருக்கு இதுபற்றி தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக விரைந்துவந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்ததை அறிந்த காவல்துறையினர் IPC இன் 330,323,341 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்