'சவக்குழிக்குள்' சடலத்தை 'தள்ளிவிட்ட' ஊழியர்கள்... 'வருத்தம் தெரிவித்த முதல்வர்...' 'அலட்சியம்' காட்டிய மூவர் 'பணியிடை நீக்கம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளியின் உடலை அலட்சியமாக அடக்கம் செய்த அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்
கொரோனா நோயாளி உடலை அலட்சியமாக சவக்குழியில் தள்ளி அடக்கம் செய்த அரசு ஊழியர்கள் மூவரை பணியிடை நீக்கம் செய்து புதுவை முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் புதுச்சேரியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின்னர் முதியவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதியவர் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற அரசு ஊழியர்கள் சடலத்தை அலட்சியமாக சவக்குழியில் தள்ளிவிட்டு சென்ற வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
இது தொடர்பாக விளக்கமளிக்க வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி கண்காணிப்பாளருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் நாராயணசாமி, இச்சம்பவம் குறித்து வேதனை அடைந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக சுகாதார துறையில் ஒருவர், உள்ளாட்சி துறையில் இருவர் என மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், அலட்சியமாக உடலை சவக்குழியில் தள்ளியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மற்ற செய்திகள்