ரெயில் வரும் நேரத்தில்.. தண்டவாளத்தை கடந்த யானை.. அதிர்ஷ்ட வேளை.. ஓட்டுநரின் சமயோஜிதம்.. குவியும் பாராட்டுகள்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரெயில் ஒன்று வேகமாக தண்டவாளத்தில் வந்து கொண்டிருக்க, அதே தண்டவாளத்தை யானை ஒன்று கடக்க முயன்றது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ரெயில் வரும் நேரத்தில்.. தண்டவாளத்தை கடந்த யானை.. அதிர்ஷ்ட வேளை.. ஓட்டுநரின் சமயோஜிதம்.. குவியும் பாராட்டுகள்.!

டிவிஷன் ரெயில்வே மேனேஜர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கருப்பு நிறத்தில் உருவம்

இந்த வீடியோவில், மேற்கு வங்க மாநிலம், குல்மாவில் இருந்து, சிவோக் நோக்கி ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை ஓட்டி வந்தவர்கள், சற்று தொலைவில் ரெயில் தண்டவாளம் அருகே ஏதோ ஒரு கருப்பு உருவம் தெரிவதை கவனித்துள்ளனர். பின்னர் அது யானை என்பதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

வனப்பகுதியில் அந்த தண்டவாளம் போடப்பட்டுள்ளதால், அந்த யானை சற்று தயக்கத்தில் நின்றதாக தெரிகிறது. பின்னர், ரெயிலில் இருந்தவர், அதன் வேகத்தை சரியான நேரத்தில் மெல்ல மெல்ல குறைக்க, அதன் பின்னர் யானை தண்டவாளத்தைக் கடந்து மறுபக்கம் சென்றுள்ளது.

பாராட்டும் நெட்டிசன்கள்

ரெயில் ஓட்டுனரின் துல்லியமான சாமர்த்தியத்தால், எந்தவித விபத்தும் நிகழாமல், யானை பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்றது. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் வெளியாகி, அதிகம் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், சரியான நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்ட ஓட்டுனரின் செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அதே போல, யானை வருவது தெரிந்ததும், ஹார்ன் எதுவும் அடித்து, அதனை பயமுறுத்த நினைக்காமல், பதற்றமும் படாமல், சரியாக நிலைமையைக் கையாண்டதற்கும் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

RAILWAYS, ELEPHANT, ரெயில்வே, யானை

மற்ற செய்திகள்