வாடகை வீட்டை உரிமை கொண்டாடிய பெண்.. மனைவியுடன் மாடிப்படியில் தஞ்சம் அடைந்த உரிமையாளர்.. கடைசில நடந்த சூப்பர் டிவிஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிந்த பெண் வீட்டை சொந்தம் கொண்டாடியதால் வீட்டின் உரிமையாளரான வயதான தம்பதி ஒன்று மாடிப்படிகளில் வசித்துவந்திருக்கிறார்கள். இது உள்ளூர் மக்களிடையே வைரலாக பேசப்பட்டு வருகிறது.
உத்திர பிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்தவர்கள் சுனில் குமார் - ராக்கி குப்தா தம்பதியர். இவருக்கு நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சொந்தமாக பிளாட் இருக்கிறது. இருப்பினும், மும்பையில் வேலைபார்த்து வந்த காரணத்தினால் அந்த பிளாட்டை பெண் ஒருவருக்கு லீசுக்கு விட்டிருக்கிறார் சுனில். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரீத்தி என்ற பெண்மணிக்கு 11 மாத லீசுக்கு கொடுத்திருக்கிறார் அவர்.
அதிர்ச்சி
இதனிடையே கடந்த மார்ச் மாதம் சுனில் குமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அதனால் தனது மனைவி ராக்கி குப்தாவுடன் சொந்த ஊர் திரும்பிய சுனில், வீட்டின் லீஸ் காலம் முடிவடையாததால் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் ப்ரீத்தியிடம் லீஸ் காலம் முடிவடைந்த உடன் வீட்டை காலி செய்யுமாறும் தனது நிலைமை குறித்தும் விளக்கியுள்ளார். இதற்கு பிரீத்தி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே லீஸ் முடியும் நாள் அன்று தனது பிளாட்டுக்கு சென்றிருக்கிறார் சுனில். அப்போது வீட்டில் இருந்த ப்ரீத்தியிடம் எப்போது வீட்டை காலி செய்கிறீர்கள்? எனக் கேட்டிருக்கிறார் சுனில். அதற்கு அது தன்னுடைய வீடு என அந்த பெண்மணி சொல்லியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனாலும் வீட்டை காலி செய்ய அந்த பெண் மறுத்துவிடவே கலங்கிப்போன அவர் காவல்துறையை நாடியுள்ளார்.
செய்தி
இந்நிலையில், இது சிவில் வழக்கு என்றும், நீதிமன்றத்தை நாடுமாறும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சுனில், தனது மனைவியுடன் பிளாட் அமைந்திருக்கும் வளாகத்தில் உள்ள மாடிப்படியில் குடியேறியுள்ளார். இப்படி 10 நாட்கள் மாடிப்படியிலேயே இந்த தம்பதியினர் வசித்து வந்திருக்கின்றனர். இதனிடையே விஷயம் அறிந்த உள்ளூர் ஊடகம் ஒன்று இதுபற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதனால் இந்த சம்பவம் உள்ளூர் முழுவதும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் அந்த பெண்மணி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள் முழுவதும் இதனை பேசுபொருளாக்கவே, தற்போது வீட்டை ஒப்படைப்பதாக அந்த பெண்மணி ஒப்புக்கொண்டிருப்பதாக சுனில் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்