"Independence Day ஏன் இப்படி இருக்கு.? இவங்க கிட்ட கேளுங்க".. இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஆனந்த் மஹிந்த்ராவின் ட்வீட்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும். அந்த வகையில், 76வது சுதந்திர தின விழாவைக் குறிப்பிட்டு ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 76வது சுதந்திர தின விழாவை மக்கள் அனைவரும் மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். வீடுகளில் கொடியேற்றியும், ஊர் பகுதிகளில் பல விதமான போட்டிகள் நடத்தியும் சுதந்திர தின விழாவினை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ஒரு முதியவர் மற்றும் மூதாட்டி வீட்டின் கூரையில் இந்திய கொடியை கட்டும் புகைப்படம் ஒன்றை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது கேப்ஷனில், "சுதந்திர தின விழா என்றால், ஏன் இவ்வளவு உணர்ச்சிவசமாக இருக்கிறது என நீங்கள் அதிசயித்தது உண்டா.? அப்படி இருந்தால் ஏன் என்று இந்த இருவரிடம் கேளுங்கள். மற்ற யாரையும் விட இவர்கள் அதனை சிறப்பாக விளக்கித் தருவார்கள். ஜெய் ஹிந்த்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தள்ளாடும் வயதிலும் மூதாட்டி மற்றும் முதியவர் இணைந்து, கூரையில் இந்திய கொடியை பறக்கவிடும் புகைப்படமும், அதற்கு ஆனந்த் மஹிந்திரா கொடுத்த கேப்ஷனும் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்