திருமணத்தை 'மீறிய' உறவில்... அதிக 'ஆர்வம்' காட்டும் இந்தியர்கள்... முதலிடத்தில் இருப்பது 'இந்த' நகரம் தானாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணத்தை மீறிய உறவில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக கிளீடன் என்னும் ஆப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. திருமணத்தை மீறிய உறவை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் இந்த ஆப் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்த இந்த ஆப் தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்த 2020-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 567% வளர்ச்சி அதிகரித்து இருப்பதாகவும், குறிப்பாக புத்தாண்டிற்கு பின் 300% பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, பூனே, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர்,சண்டிகர், லக்னோ, கொச்சி, விசாகப்பட்டினம், நாக்பூர் போன்ற நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் இந்த ஆப்பில் போட்டிபோட்டு தங்களை இணைத்து கொண்டுள்ளனராம்.
இதில் பெங்களூர் நகரம் தான் முதலிடத்தில் இருக்கிறதாம். இந்தியாவிலேயே பெங்களூரில் இருந்து தான் அதிகம் பேர் இந்த ஆப்பினை பயன்படுத்துவதாக கிளீடன் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொண்டவர்கள், விவாகரத்தானவர்கள், துணையை விட்டுப் பிரிந்து வாழ்வோர் ஆகியோருக்காக தொடங்கப்பட்ட இந்த ஆப்பில் ஆண், பெண் என 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் இணைந்துகொள்ளலாம் என்பது குறிப்பித்தக்கது.