''கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கையில் சீல்...' அழியாத 'மை' நாங்கள் வழங்குகிறோம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்கள் மீது இனி அழியாத மை பயன்படுத்தி முத்திரை அளிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

''கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கையில் சீல்...' அழியாத 'மை' நாங்கள் வழங்குகிறோம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடப்பட்ட மை சீக்கிரம் அழிந்து விடுவதாக புகார் வந்தது. அதனால் இனிமேல் அழியாத மை பயன்படுத்தி முத்திரை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் அல்லது கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் அல்லது முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக மையினால் குறிப்பிடப்படும் ஒரு அடையாளத்தை சீல் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அந்த குறியீட்டிற்கு தேர்தல் ஆணையத்தில் தேர்தல் நேரங்களில் பயன்படுத்தும் மையை பயன்படுத்த அதிகாரப்பூர்வ உத்தரவை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

ELECTIONCOMMISSION