பெங்களூரு அருகே 5 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்.. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு அருகே அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அருகே 5 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்.. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வடகிழக்குப் பகுதியில் இன்று (22.12.2021) காலை 7.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Earthquake of magnitude 3.3 hits Bengaluru

இதனை அடுத்து 7:14 மணிக்கு இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக உள்ளது. பெங்களூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் 23 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்பு இதே போல் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

EARTHQUAKE, BENGALURU

மற்ற செய்திகள்