'மது போதையில்' டிரான்ஸ்ஃபார்மர் மீது கைவைத்த 'நபர்'!.. 'வீடியோவில்' பதிவான 'பதைபதைக்க' வைத்த 'காட்சிகள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானாவில் மது போதையில் இளைஞர் ஒருவர் மது போதையில் தடுமாறி டிரான்ஸ்ஃபார்மரில் கை வைத்ததை அடுத்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் வீடியோ காட்சிகளாக வெளியாகி, காண்போர்களை பதறவைத்துள்ளது.

'மது போதையில்' டிரான்ஸ்ஃபார்மர் மீது கைவைத்த 'நபர்'!.. 'வீடியோவில்' பதிவான 'பதைபதைக்க' வைத்த 'காட்சிகள்'!

தெலுங்கானாவின் கொரட்லாவில், சாலையில் செல்பவர்கள் மீது கற்களை வீசி எறிவதும், பெரிய பெரிய கற்களை சாலையில் வைப்பதும் எடுப்பதுவுமாக இளைஞர் ஒருவர் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்துள்ளார். இதனை வீடியோ எடுத்த சிலர், அந்த இளைஞர் மது போதையில் இருந்ததாலும், பெரும் கற்களை எடுத்துக் கொண்டிருந்ததாலும், அருகில் செல்லாததாக தெரிகிறது.

ஆனால் திடீரென அந்த இளைஞர் அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் கைவைத்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்ஃபார்மரில் இருந்த மின்சாரம் தாக்கி அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்ததும் அங்கு விரைந்து வந்த அந்த போலீஸார் விசாரித்ததில் அந்த இளைஞர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் அவர் கொரட்லா பகுதிக்கு கட்டட வேலைக்காக வந்தார் என்பதும் தெரியவந்தது.