'பல அலைகள் வந்ததுக்கு அப்புறம்...' கொரோனா 'இந்த மாதிரி' ஆக கூட சான்ஸ் இருக்கு...! - எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் 'ஷாக்' தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸின் மூன்றாவது அலையை குறித்து கூறப்படும் தகவல்கள் இன்னும் நிரூபிக்கப்படாதவை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மரண எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மக்கள் மருத்துவமனை இல்லாமலும், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமலும் அவதிப்படும் வீடியோ இந்திய மக்களை மட்டுமில்லாது உலக மக்களையும் கவலையில் ஆழ்த்தியது. அதோடு பல உலகநாடுகள் இந்தியாவிற்கு உதவும் முன்வந்தன.
இரண்டாம் அலை சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவின் மூன்றாம் அலை குறித்த விவாதங்களும், பயமும் மக்களை தொற்றியுள்ளது என்றே கூறவேண்டும். அதோடு இந்த மூன்றாம் அலையின் போது அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்ற கருத்தும் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் கூறும் போது, 'கொரோனாவின் இரண்டாம் அலையின்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 60 முதல் 70% பேருக்கு இணை நோய்த்தன்மை அல்லது குறைந்தளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததது; லேசான பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படாமலே குணமடைந்தனர்.
அதோடு கொரோனா மூன்றாவது அலை குறித்து யோசிக்கும் மக்கள் அது வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மீண்டும் கொரோனா வைரஸின் கோர முகத்தை காணாமல் இருக்க வேண்டும் என்றால், குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் தடுப்பூசி பெறும் வரை கொரோனா கட்டுப்பாடுகளை நாம் பின்பற்ற வேண்டும்.
அதோடு முதல் அலையின் போது இருந்த கொரோனா வைரஸ், இரண்டாம் அலையின் போது சற்று உருமாறியிருந்தது. வைரஸ் மாற்றமடையும்போது, அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகைகள் உருவாகின்றன.
சுவாச பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸான கொரோனா, இப்படி பல அலைகளாக தாக்கும். 1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சலின்போதும், 2009-ல் பன்றிக் காய்ச்சலின் போதும் இதுதான் நடந்தது. அதுமட்டுமல்லாமல் பல அலைகளுக்கு பிறகு பருவகால தொற்றாக கொரோனா மாறலாம்' என்று ஒரு குண்டையும் சேர்த்து போட்டுள்ளார் டாக்டர் ரன்தீப் குலேரியா.
மற்ற செய்திகள்