அரசியல் பயணத்துக்கு நடுவே வந்த தகவல்.. சிறுவனுக்கு ஆப்ரேஷன் செய்ய விரைந்த 'டாக்டர்' முதலமைச்சர்.. நெகிழ்ந்துபோன மக்கள்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சாஹா, 10 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையினை செய்து முடித்திருக்கிறார். இது அம்மாநிலம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
திரிபுரா மாநிலத்தின் தற்போதைய முதல்வராக இருப்பவர் டாக்டர். மாணிக் சாஹா. அரசியலில் இணைவதற்கு முன்பு, சாஹா திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். பின்னர் அரசியலில் கால்பதித்தார் சஹா. 2016 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சாஹா, 2020 ஆம் மாநில பாஜக தலைவராக ஆனார். 2022 ஆம் ஆண்டு மே மாதம் திரிபுரா முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்த பிறகு சாஹா முதல்வராக பதவியேற்றார்.
அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாஹா, நேற்று தான் பணிபுரிந்த மருத்துவ கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கே 10 வயது சிறுவனுக்கு பல் ஈறுகளில் செய்யப்படும் Oral Cystic Lesion எனும் ஆப்ரேஷனை சாஹா வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார். காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த சாஹா அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை முடித்து திரும்பியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"எனது பழைய பணியிடமான திரிபுரா மருத்துவக் கல்லூரியில் 10 வயதான அக்ஷித் கோஷிற்கு Oral Cystic Lesion அறுவை சிகிச்சை செய்ததில் மகிழ்ச்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்தாலும் சிரமம் ஏதும் இல்லை. சிறுவன் இப்போது நல்ல நிலையில் உள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சையின்போது முதல்வருக்கு டாக்டர் அமித் லால் கோஸ்வாமி, டாக்டர் பூஜா தேப்நாத், பல் அறுவை சிகிச்சை மற்றும் மேக்சில்லா முக அறுவை சிகிச்சை துறையின் டாக்டர் ருத்ர பிரசாத் சக்ரவர்த்தி ஆகியோர் உதவியுள்ளனர். மேலும், டாக்டர் ஸ்மிதா பால், டாக்டர் காஞ்சன் தாஸ், டாக்டர் ஷர்மிஷ்தா பானிக் சென் மற்றும் டாக்டர் பைஷாலி சாஹா ஆகியோரும் அறுவை சிகிச்சையில் பங்குபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Happy to conduct a surgery for Oral Cystic Lesion of 10-year-old Akshit Ghosh at my old workplace Tripura Medical College.
There was no difficulty in performing the surgery though it was after a long gap. The patient is in good condition now. pic.twitter.com/GfzZ4CeVVD
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) January 11, 2023
Also Read | கிரவுண்ட்ல பாண்டியாவை முறைத்த விராட் கோலி.. டக்குன்னு பாண்டியா செஞ்ச காரியம்..!
மற்ற செய்திகள்