ஊரடங்கு சமயத்தில இவங்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகியிருக்காம்’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு சமயத்தில் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் வருத்தம் தெரித்துள்ளது.

ஊரடங்கு சமயத்தில இவங்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகியிருக்காம்’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 24ம் தேதியில் இருந்து இதுவரை 257 புகார்கள் வந்திருப்பதாகவும், அதில் 69 புகார்கள் வீடுகளில் நிகழும் வன்முறைகள் குறித்து வந்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேஹா ஷர்மா தெரிவித்துள்ளார்.

மார்ச் முதல் வாரத்தில் இதேபோல் 3 புகார்கள் வந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பெரும்பாலும் மின்னஞ்சல் மூலமே புகார்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் தபால் சேவை இயங்காததால் இணையத்தை உபயோகிக்க தெரியாத பெண்களின் புகார்கள் வராமல் இருக்காலம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தனக்கு கொரோனா இருக்கு என கூறி துன்புறுத்துவதாகாவும், அதனால் தன்னை வீட்டை விட்டு வெளியேற சொல்லவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளாதல் தனது தாய் வீட்டுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அப்பெண் குறிப்பிட்டுள்ளதாக ரேஹா ஷர்மா தெரிவித்துள்ளார். குறிப்பாக உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

CORONA, CORONAVIRUS, INDIALOCKDOWNFOR21DAYS, WOMEN