'இதுக்கெல்லாம் டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேண்டியதில்ல!'.. கொரோனா பரிசோதனையில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் COVID-19 -ன் ஆர்டி / பி.சி.ஆர் சோதனைக்கு (RT/PCR Test) மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் பரிந்துரைச் சீட்டு (Prescription) கட்டாயமில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், மருத்துவரின் பரிந்துரையோ அல்லது கொரோனா அறிகுறிகளோ இருந்தால்தான் சாத்தியம். ஆனால், தொற்றுநோய் பரிசோதனைக்கு, டெல்லியின் முகவரி ஆதாரத்திற்காக, ஆதார் அட்டை (Aadhaar Card),கோவிட் -19 சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பரிந்துரைத்த படிவத்தை மக்கள் பூர்த்தி செய்தலே போதுமானது என்றும், பி.சி.ஆர் சோதனைக்கு (RT/PCR Test) மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் பரிந்துரைச் சீட்டு (Prescription) கட்டாயமில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் தனியார் ஆய்வகங்கள் ஒவ்வொரு நாளும், 2,000 பேருக்கு COVID-19 சோதனைகளை செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் நாளொன்றுக்கு 12,000 பரிசோதனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20,543 பேராகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,599 பேராகவும் உள்ளது.
மற்ற செய்திகள்