என் மனசுக்குள்ள திரும்பத்திரும்ப 'அந்த கேள்வி' வந்துட்டே இருந்துச்சு...! இந்த மாதிரி நேரத்துல 'இதெல்லாம்' அவசியம் தானா...? 'டேட் வரைக்கும் பிக்ஸ் பண்ணிட்டாங்க...' - இளம் டாக்டர் எடுத்த அதிரடி முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருக்கும் பிரபல இருதயவியல் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் அபூர்வா. இவர் கடந்த ஏப்ரல் 26-ம் தேதியன்று திருமணம் நடப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

என் மனசுக்குள்ள திரும்பத்திரும்ப 'அந்த கேள்வி' வந்துட்டே இருந்துச்சு...! இந்த மாதிரி நேரத்துல 'இதெல்லாம்' அவசியம் தானா...? 'டேட் வரைக்கும் பிக்ஸ் பண்ணிட்டாங்க...' - இளம் டாக்டர் எடுத்த அதிரடி முடிவு...!

ஆனால், அவர் தனக்கு தற்போது திருமணம் தேவையில்லை என திருமணம் செய்துக்கொள்வதை தள்ளி வைத்து விட்டார்.

மேலும், இதுபற்றி அவர் கூறும்போது, ‘கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் என்னுடைய அப்பா எங்களைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவரை இழந்ததன் வலியை வார்த்தைகளால் சொல்லிட முடியாது. என்னை போன்று, பல குடும்பங்கள் கொரோனா வைரஸினால், உறவுகளை இழந்தும், பணத்தை இழந்தும், வேலையை இழந்தும் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு தினமும் அவர்கள் தங்களுக்கு யாராவது உதவிட மாட்டார்களா என்று ஏங்கி வருகின்றனர்.

நான் ஒரு டாக்டராக இருக்கும் காரணத்தினால், என்னை போனில் அழைத்து பேசுகிறார்கள். என்னிடம் மக்கள் விரக்தியுடனும், கோபத்துடனும் தொடர்ந்து பேசுகிறார்கள்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால், மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்காக நான் ஒவ்வொரு நிமிடமும் சேவை செய்து வருகிறேன்.

இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் தான் என்னுடைய திருமண ஏற்பாடுகள் நடந்தன. படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், வென்டிலேட்டர்கள்,  மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. மக்கள் அல்லல் படும் நேரத்தில் எனக்கு திருமணம்  தேவையா? என்று எனக்குள் கேள்விகள் எழுந்தன. அதனால், எனது திருமணத்தை குறிப்பிட்ட நாளில் செய்து கொள்ள விரும்பவில்லை. எனது திருமணம் நடந்த அடுத்த நாள் 20 முதல் 25 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. இதைப் பற்றி என் குடும்பத்தில் கூறினேன். என்னுடைய அம்மா, சகோதரி, மணமகன் குடும்பத்தினர் ஆகியோர் எனது முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்" இவ்வாறு மருத்துவர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்