ராஜஸ்தான் மாநில மருத்துவமனையில் நோயாளியை மருத்துவர் ஒருவர் அடித்து உதைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அறுவை செய்யும்போது அணியும் மாஸ்க் அணிந்த மருத்துவர் ஒருவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளியை சரமாரியாக அடித்து உதைக்கிறார். அந்த நோயாளியைத் தள்ளிவிட்டு மருத்துவமனை கட்டில் மீது ஏறி அந்த மருத்துவர் அவரைத் தொடர்ந்து அடிக்கிறார். மற்ற நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் அதைப் பார்த்துக் கொண்டே சுற்றி நிற்கின்றனர். கடைசியாக ஒரு மருத்துவர் வந்து அடிப்பவரைத் தடுத்து கூட்டிப் போகிறார்.
இதை அங்குள்ள ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுபற்றி முறையாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது. அந்த வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.
#WATCH: A resident doctor beat up a patient in Sawai Man Singh (SMS) Medical College in Jaipur, Rajasthan, yesterday. Raghu Sharma, Medical & Health Minister of Rajasthan says,' We have asked for a report on the video as to what really happened.' pic.twitter.com/9mU97nwif2
— ANI (@ANI) June 3, 2019