ஹேய் கொரோனா...! 'வாக்சின் போட்டும் மூணு தடவ வந்துட்ட...' 'நாலாவது தடவலாம் உன்ன வர விடமாட்டேன்...' - நம்பிக்கையுடன் கூறிய டாக்டர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு தடுப்பூசி போட்டும் 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேய் கொரோனா...! 'வாக்சின் போட்டும் மூணு தடவ வந்துட்ட...' 'நாலாவது தடவலாம் உன்ன வர விடமாட்டேன்...' - நம்பிக்கையுடன் கூறிய டாக்டர்...!

மும்பையைச் சேர்ந்த பெண் மருத்துவர் 26 வயதான ஸ்ருஷ்டி ஹலாரி. மும்பை வீர சார்வார்கர் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு, மூன்றாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டதுள்ளது.

கோவிட் மையத்தில் பணியாற்றி வரும் ஸ்ருஷ்டிக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி முதன்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் மீண்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

doctor from Mumbai contracted corona 3 times last 13 months

இந்த நிலையில் மீண்டும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் காய்ச்சல் வந்துள்ளது. அதன்பின் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஸ்ருஷ்டி கொரோனா தடுப்பூசியும் எடுத்துக்கொண்டுள்ளார்.

மீண்டும் கடந்த ஜூலை மாதம் மூன்றாவது முறையாக  மாதத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை கொரோனா தொற்று ஏற்பட்ட போது நிறைய சிரமங்களை எதிர்க்கொண்டதாக ஸ்ருஷ்டி தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலையும் மிக மோசமாக இருந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள ஸ்ருஷ்டி ஹலாரி, 'நான் ஒரு மருத்துவர். நான் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குவேன்.

ஆனால் எனக்கு 3 முறை தொற்று ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் எனக்கு நோய் அறிகுறிகள் இல்லை. நல்ல வேளையாக நுரையீரல் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இனி நான்காவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட விட மாட்டேன்' என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

மற்ற செய்திகள்