சாதாரண இருமலும், தும்மலும் 'கொரோனா' பாதிப்பு அல்ல... அதன் 'காரணம்' இதுதான்: மருத்துவர்கள் விளக்கம்
முகப்பு > செய்திகள் > இந்தியாசாதாரணமாக ஏற்படும் இருமலும், தும்மலும் கொரோனா பாதிப்பு அல்ல என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் சாதாரணமாக வரும் இருமல், தும்மல் கொரோனா பாதிப்பு அல்ல என்றும் இதற்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. மேலும் இருமலுடன் சளி, தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சினைகள் காணப்பட்டால் அவை சாதாரண ஜலதோஷம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேற்கண்ட அறிகுறிகளுடன் உடல் வலி, தளர்ச்சியாக உணர்தல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்தால் அவை ஃபுளு காய்ச்சலின் அறிகுறியாகும் எனக் கூறியுள்ளது. எனினும் இதுபோன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அவை கொரோனாவாக மாற வாய்ப்புகள் இருப்பதால் மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்




