23 வயதில் '100 கோடிக்கு' அதிபதி... இளம் 'தொழிலதிபரை' மணக்கும் ஐஸ்வர்யா... யாருன்னு தெரியுதா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மறைந்த கஃபே காபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியாவை மணக்க இருக்கிறார்.

23 வயதில் '100 கோடிக்கு' அதிபதி... இளம் 'தொழிலதிபரை' மணக்கும் ஐஸ்வர்யா... யாருன்னு தெரியுதா?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கஃபே காபி டே அதிபர் சித்தார்த்தா பல்வேறு நெருக்கடிகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் என்பதால் இந்த தற்கொலை இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவகுமாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கஃபே காபி டே சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சிவகுமாரும் பேட்டி ஒன்றில் தெரிவித்து திருமணத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார். 27 வயதாகும் அமர்த்தியா அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு தாயார் மளவிகாவுடன் இணைந்து சொந்த தொழிலை கவனித்து வருகிறார்.

23 வயதாகும் ஐஸ்வர்யா பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தந்தை சிவகுமாரின் குளோபல் அகாடமி ஆப் டெக்னாலஜி என்னும் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். மறைந்த சித்தார்த்தாவும், சிவகுமாரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். சித்தார்த்தா உயிருடன் இருந்தபோதே இந்த திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டதாம். அவர் மறைந்து முழுதாக ஒரு வருடம் ஆகவில்லை என்பதால் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் சிவகுமார் சிறைவாசம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டார். இதில் வருமான வரித்துறை விசாரணையும் அடக்கம். அப்போது தான் சிவகுமாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. குறிப்பாக அவரது பெயரில் 100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக வருமான வரித்துறை விசாரணையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

TRENDING NEWS

மற்ற செய்திகள்