'ஹேப்பி தீபாவளி 2020!'.. பேஸ்புக்கின் ‘விர்ச்சுவல் தீபாவாளி கொண்டாட்டம்!’.. அசரவைக்கும் புதிய அம்சங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா காரணமாக, பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே விர்ச்சுவல் தீபாவளி கொண்டாடப்பட வேண்டியிருப்பதால்,  புதிய தீபாவளி-தீம் அவதார்களுடன் கூடிய புதிய அம்சத்தை பேஸ்புக் வெளியிடவுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வேடிக்கையான சவால்களில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையிலான வாய்ப்பையும், ஆன்லைனில் பண்டிகை உற்சாகத்தை பரப்புவதையும் இதன் மூலம் பேஸ்புக் செய்யவிருக்கிறது.

'ஹேப்பி தீபாவளி 2020!'.. பேஸ்புக்கின் ‘விர்ச்சுவல் தீபாவாளி கொண்டாட்டம்!’.. அசரவைக்கும் புதிய அம்சங்கள்!

#DiwaliAtHomeChallenge என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தீபாவளி கொண்டாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொள்ள இந்த புதிய அம்சங்கள்   சவால் விடும். ஒளி விளக்குகள், மெழுகுவர்த்தி வைத்திருப்பவர்கள், தீபங்கள் மற்றும் விளக்குகளை எவ்வாறு மறுசுழற்சி செய்கிறீர்கள் என்பதற்கான DIY வீடியோவை இதெற்கென உருவாக்கி #DIYDiwaliChallenge ஹேஷ்டேகைப் பயன்படுத்தி தீபாவளி தொடர்பான DIY திட்டங்களைப் பகிர்ந்து கொள்ள நண்பர்களுக்கு இதன் மூலம் சவால் விடலாம்.

இதுகுறித்த மின்னஞ்சல் அறிக்கையில் “நீங்கள் புதிய பேஸ்புக் பதிவினை உருவாக்கும்போது,‘challenge’ என்ற ஆங்கில வார்த்தையில் முடிவடையும் எதேனும் ஒரு ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஒரு சவாலைத் தொடங்கலாம்.  உங்கள் செய்தி இடுகைகளில் வேறொரு சவால் பதிவினை நீங்கள் பார்க்கும் போது “Try It” பட்டனை அழுத்தியும் சவால்களை பதிவிடலாம். இதனுடன் புகைப்படம், வீடியோக்களை இணைத்து குடும்பத்தினரை டேக் செய்து, அவர்களையும் சவால்களைச் செய்ய பரிந்துரைக்கலாம்.

இதே போல் குறுகிய பதிவுகளுக்கு சொந்த மொழியில் வண்ணமயமாக, சொந்த அவதார் தீம்களையும் பதிவிடும் அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் தொலைபேசியிலிருந்து அவதாரத்தை உருவாக்கி, Android அல்லது IOS இல் “Create Post” கம்போஸருக்கு சென்று, அதில் “Background Colour"-ஐ கிளிக் செய்து தீபாவளி பேக்ரவுண்டாக தேர்ந்தெடுக்கலாம். இதற்கான உள்ளடக்கத்தை பின் தொடர #ShubhDiwali2020 மற்றும் #Diwali2020 ஆகியவற்றின் பயன்படுத்தலாம்.

மற்ற செய்திகள்