COBRA M Logo Top

விருந்துல அப்பளம் வைக்காததால் ஆத்திரம்.. களேபரமான கல்யாண மண்டபம்.. தெறிச்சு ஓடிய உறவினர்கள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கூடுதலாக அப்பளம் கொடுக்காததால் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. இந்த சம்பவம் குறித்து அந்த மாநிலமே பரபரப்புடன் பேசிவருகிறது.

விருந்துல அப்பளம் வைக்காததால் ஆத்திரம்.. களேபரமான கல்யாண மண்டபம்.. தெறிச்சு ஓடிய உறவினர்கள்..

Also Read | "அது வெறும் நகரம் மட்டும் இல்ல, ஒரு உணர்வு".. சொந்த ஊர் குறித்து தொழிலதிபர் போட்ட பதிவு.. உருகும் நெட்டிசன்கள்..!

பொதுவாக திருமணங்களில் பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படுவது உண்டு. பத்திரிக்கை துவங்கி, கல்யாண விருந்து வரை ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்துடன் செயல்பட்டாலும் சில நேரங்களில் அதனால் சச்சரவுகள் ஏற்படுவது உண்டு. திருமணத்தன்று இதுபோன்ற சண்டைகள் நடைபெறுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்தில் கூடுதலாக அப்பளம் வைக்கவில்லை எனக்கூறி தகராறு நடந்திருக்கிறது. இது அந்த பகுதி மக்களை திகைக்க வைத்திருக்கிறது.

Dispute over pappadam in marriage hall 3 injured 15 booked

திருமணம் 

கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள முட்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், திருக்குன்றப்புழாவைச் சேர்ந்த இளைஞருக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து முட்டம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இவர்களது திருமணம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் இருவீட்டார் மற்றும் மணமகனின் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த நிலையில், விருந்து நடைபெற்றிருக்கிறது.

அப்பளம்

அப்போது, மணமகனின் நண்பர் ஒருவர் கூடுதலாக அப்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. உணவு பரிமாறுபவர் அப்பளத்தை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் மணமகனின் நண்பர்கள் மற்றும் உணவு பரிமாறியவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமடைந்த மணமகனின் நண்பர் ஒருவர் அருகில் இருந்த டேபிள் மற்றும் சேரை உடைக்க இதனை பெண்வீட்டார் மற்றும் மண்டப ஊழியர்களும் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் பிரச்சனை பெரிதாகியிருக்கிறது.

Dispute over pappadam in marriage hall 3 injured 15 booked

வாக்குவாதம் கைகலப்பாக மாற, மண்டபத்தின் உரிமையாளர் முரளீதரன் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து மண்டபத்திற்கு விரைந்து வந்த காவல்த்துறையினர் அங்கு கூடியிருந்தவர்களை கலைத்தனர். இந்த தாக்குதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதனால் கல்யாணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறியிருக்கின்றனர்.

Also Read | வித்தை காட்டிய ஐஸ் கிரீம் அங்கிள்.. அசால்ட்டா டீல் செஞ்ச குட்டிப்பையன்.. வைரலாகும் கியூட் வீடியோ..!

KERALA, MARRIAGE, PAPPADAM

மற்ற செய்திகள்