#UKlockdown: “இந்த கொடுமைலாம் பாத்தா.. கொரோனாவே கண்ணீர் விடும்!”.. ‘லாக்டவுன்’ நேரத்தில் ‘இளைஞர்கள்’ வீட்டில் பார்த்த ‘வேலை!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரனா வைரஸ் அச்சுறுத்தலால் உலக நாடுகள் முழுவதும் பெரும் பீதியில் உறைந்துள்ளன. இன்னும் இந்த கொடிய ஆட்கொல்லி நோயை விரட்டுவதற்கான மனித முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

#UKlockdown: “இந்த கொடுமைலாம் பாத்தா.. கொரோனாவே கண்ணீர் விடும்!”.. ‘லாக்டவுன்’ நேரத்தில் ‘இளைஞர்கள்’ வீட்டில் பார்த்த ‘வேலை!’

அதன் முக்கியமான அம்சங்களாக மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் விலகியிருத்தல், சமூகத்தில் இருந்து விலகி இருத்தல், தனிமைப்படுத்திக்கொள்ளல் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தனிநபர்களும், சமூகமும், நாடும், நகரமும் மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் அந்தந்த நாடுகளில் அறிவுறுத்தி வருகின்றன.

இதனால் லாக்டவுன் எனப்படும் நகரங்களை தனிமைப்படுத்துதல், பார்டகள் மூடப்படுதல், வீட்டை விட்டு மக்கள் வெளியே வராதிருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருத்தல் என்பது மிக அவசியமானதாகவும், பாதுகாப்பு வழிமுறையாகவும் கருதப்படுகிறது இதனால் லண்டனின் சில இடங்களில் இளைஞர்கள் தங்களுக்கு தாங்களே முடி திருத்தம் செய்து கொள்ளும் புகைப்படங்கள் இணையதளங்களில்

வைரல் ஆகி வருகின்றன. பேச்சிலராக இருக்கும் இளைஞர்கள் அறைகளில் இருக்கும் ஒருவருக்கொருவர் தள்ளி நின்றபடி முடி திருத்தம் செய்துகொள்வதும், சிலர் தங்களுக்குத் தாங்களே செய்து முடிதிருத்தம் செய்து கொள்வதும் வைரலாகி வருகிறது. ஆனால் இவர்கள் யாரும் தொழில்முறை முடிதிருத்தம் செய்பவர்கள் இல்லை என்பதால் சரிவர முடி திருத்தம் செய்யத் தெரியாமல் தாறுமாறாக இந்த வேலைகளை செய்து உள்ளனர் என்பதுதான் இந்த படங்கள் வைரலானதற்கான முக்கியக் காரணம்.‌ இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,  ‘’

CORONAVIRUS, CORONA, CORONALOCKDOWN, CRONAVIRUSOUTBREAK, UKLOCKDOWN