முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மரணமடைந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இயக்குனரான மனு ஜேம்ஸ் மரணமடைந்தது கேரள சினிமா உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மரணமடைந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

                      Images are subject to © copyright to their respective owners.

2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஐ எம் க்யூரியஸ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மனு ஜேம்ஸ். அதன் பிறகு இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக மனு பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, தன்னுடைய முதல் படமான 'நான்சி ராணி'-யின் பணிகளில் இறங்கினார்.

இந்தப் படத்தில் அஹானா கிருஷ்ணா நாயகியாக நடித்துள்ளார். மேலும், சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜான் வர்கீஸ் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வந்திருக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட மனு, கேரளாவின் ஆலுவா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த படக்குழு மட்டுமல்லாது, திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் வர்கீஸ் எழுதியுள்ள உருக்கமான பதிவில்,"உடலும் மனமும் நடுங்குகிறது. ஒருநாள் மனுவை சந்தித்தேன். அதுவே இருவருக்கும் இடையே சிறந்த பந்தமாக மாறியது. அதுவே என்னை நான்சி ராணியின் ஒரு அங்கமாக மாற்றியது. அந்த மனு இப்போது காலமாகிவிட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய முதல் படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனர் மனு ஜேம்ஸ் மரணமடைந்தது சினிமா ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MANU JAMES, DIRECTOR

மற்ற செய்திகள்