என் சபதம் நிறைவேறும் நாள் தான்.. செருப்பு போடுவேன்.. வெறும் காலில் 11 வருடங்களாக நடக்கும் இளைஞர்.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப்: பஞ்சாபில் ஒருவர் 11 வருடமாக வெறும் காலில் நடமாடும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

என் சபதம் நிறைவேறும் நாள் தான்.. செருப்பு போடுவேன்.. வெறும் காலில் 11 வருடங்களாக நடக்கும் இளைஞர்.. என்ன காரணம்?

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்திக்கு இப்படியும் ஒரு ரசிகரா என்ற கேள்வி தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழ் திரைப்படத்தில் வரும் யார் சாமி இவன், இவ்ளோ நாள் எங்க இருந்தான் என பிரகாஷ் ராஜ் சொல்லும் டயலாக்கிற்கு பொருந்துமாறு ஒருவர் இருக்கிறார் என்றால் அது ராகுல் காந்தியின் ரசிகரான தினேஷ் சர்மா.

Dinesh Sharma not wear sandals until Rahul Gandhi become PM

பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வரும் நடக்கும்  ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று. இதன்காரணமாக, பிரச்சாரத்திற்காக காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நேற்று பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்திருந்தார்.

யோவ்.. எனக்கு பசிக்குதுயா.. ஆசையா இருந்தேன், இப்படி சாப்பிட விடாம பண்ணிட்டீங்களே, நல்லா இருப்பீங்களா? கதறும் பெண்

செருப்பு அணியாமல் பல மணி நேரம் காத்திருப்பு:

Dinesh Sharma not wear sandals until Rahul Gandhi become PM

அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் நடத்திய கூட்டத்திற்கு வெளியே ஒரு இளைஞர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். அந்த இளைஞர் பஞ்சாபில் நிலவும் கடும் குளிரையும் கண்டுகொள்ளாமல், கால்களில் காலணிகளை அணியாமல் பல மணி நேரம் நின்றுள்ளார். இதனாலே அங்கிருந்தவர்கள் அவரை வியப்பாக பார்த்தனர். அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த சிலர் ஏன் இப்படி நிற்கிறார் என கேட்ட போது சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

Dinesh Sharma not wear sandals until Rahul Gandhi become PM

காலணிகள் அணிவதில்லை என சபதம்:

அந்த இளைஞர் தான் பஞ்சாபின் அருகிலுள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த இந்த 30 வயதான தினேஷ் சர்மா. தினேஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமர் பதவியில் அமரும் வரை காலணிகள் அணிவதில்லை என சபதம் எடுத்துள்ளார். இதுநாள் வரை அவரின் 11 வருடங்களாக காலணி இன்றி வெறும் கால்களில் நடந்து வந்து அவரின் சபதத்தை கடைப்பிடித்து வருகிறார்.

Dinesh Sharma not wear sandals until Rahul Gandhi become PM

'ஆனந்த் மகிந்திரா' வை அசரவைத்த ஆட்டோ டிரைவர்.. நேரில் அழைத்து நெகிழ்ந்து போன டிஜிபி..

சோனியா காந்தியுடன் புகைப்படம்:

இந்த விஷயத்தை அறிந்த ராகுல் காந்தி உடனடியாக தினேஷை அழைத்து அவருடன் கலந்துரையாடி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அவர் மட்டுமல்லாது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி அவர்களும் தினேஷை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Dinesh Sharma not wear sandals until Rahul Gandhi become PM

மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரான ராகுல், இன்று ஜலந்தருக்கு செல்வதால் தானும் நேரில் சென்று ஆதரவளிக்க இருப்பதாகவும் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

Dinesh Sharma not wear sandals until Rahul Gandhi become PM

DINESH SHARMA, WEAR SANDALS, RAHUL GANDHI, PM

மற்ற செய்திகள்