'வரலாற்றில் 'முதல் முறையாக...' 'பெட்ரோலை' முந்திய 'டீசல் விலை...' ஆமா... எண்ணெய் நிறுவனங்கள் தான் ஏத்துச்சு... மத்திய அரசு இல்ல... '2020ல்' இன்னும் எதெல்லாம் 'பார்க்கணும்மோ தெரியல...'
முகப்பு > செய்திகள் > இந்தியாதலைநகர் டெல்லியில் முதல் முறையாக, டீசல் விலை பெட்ரோலை விட அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 18வது நாளாக டெல்லியில் டீசல் விலை 48 காசுகள் உயர்த்தப்பட்டதால், லிட்டர் 79. 88 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேநேரத்தில் பெட்ரோல் விலை இன்று உயர்த்தப்படாததால், லிட்டர் 79.76 ரூபாயாக இருந்தது. இதனால் தலைநகரில் முதல்முறையாக பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனையாகிறது.
கடந்த 18 நாட்களில், பெட்ரோல் லிட்டருக்கு எட்டு ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் 48 காசுகளும் உயர்ந்துள்ளன.
இதேநிலை நீடித்தால் பெட்ரோல்-டீசல் விலைகளுக்கு இடையிலான இடைவெளி இல்லாமலே போய்விடும் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்