'சைவம்ங்க... வெங்காயம் சாப்பிட்டதே இல்ல!'.. 'எங்க கிட்ட போய்..'சர்ச்சையில்' சிக்கிய அமைச்சர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சைவ உணவு முறையை கடைபிடிப்பதால், வெங்காய விலை உயர்வு பற்றி தனக்கு  எதுவும் தெரியாது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் கூறியிருக்கு கருத்து  சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

'சைவம்ங்க... வெங்காயம் சாப்பிட்டதே இல்ல!'.. 'எங்க கிட்ட போய்..'சர்ச்சையில்' சிக்கிய அமைச்சர்கள்!

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 150 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுவதால், மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு வருகின்றனர். பலரும் வெங்காயம் கலக்காத உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். ஆங்காங்கே கடைகளில் கல்லாப்பெட்டிகளுக்கு பதிலாக வெங்காய மூட்டைகளே திருடுபோகின்றன.

ஆந்திரா போன்ற சில மாநில அரசுகளில் வெங்காயத்தை அரசே மானிய விலைகளில் தந்து உதவுகிறது. இந்நிலையில், தான் வெங்காயம் மற்றும் பூண்டு உண்ணாத குடும்பத்தில் இருந்து வந்ததாக மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் , தான் ஒரு சைவ உணவுப்பிரியர் என்பதால் வெங்காயத்தை உண்டதே இல்லை என்றும், அதனால் அதன் விலை உயர்வு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

NIRMALASITHARAMAN, ONIONPRICE