‘இவங்கள பத்தி எல்லாம் ஆன்லைன்ல தேடிப் பாக்கறவங்களா நீங்க?’.. ‘அப்போ ரொம்ப உஷார்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைன் தேடலின்போது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பட்டியலில் தோனியின் பெயர் முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘இவங்கள பத்தி எல்லாம் ஆன்லைன்ல தேடிப் பாக்கறவங்களா நீங்க?’.. ‘அப்போ ரொம்ப உஷார்’..

இந்தியாவில் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் தேடும்போது வரும் லிங்க்குகள் பயனாளர்களை ஆபத்தான தளங்களுக்கு கொண்டு செல்லும் அபாயம் உள்ளது. தீங்கிழைக்கும் தளங்கள்  பயனாளர்களை தங்கள் தளங்களுக்கு கொண்டு வர பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்துகின்றன.

இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஆன்லைனில் தேடும்போது மிகவும் ஆபத்தான தளங்களுக்கு கொண்டு செல்லும் பிரபலங்களின் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் தோனியை அடுத்து 2வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

சன்னி லியோன், பி.வி.சிந்து, ஷ்ரத்தா கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். பயனாளர்கள் பிரபலங்களின் ரகசிய மற்றும் அந்தரங்க செய்திகளை தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதால் இதுபோன்ற ஆபத்தான தளங்களுக்கு சென்றடைவதாக அந்நிறுவனத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

MSDHONI, SACHINTENDULKAR, SUNNYLEONE, PVSINDHU, SHRADDHAKAPOOR, RADHIKAAPTE, MCAFEES, DANGEROUS, ONLINE, SAERCH, CELEBRITY