ஆசிரியர் பணிக்கு 'தோனி' விண்ணப்பித்தாரா...? 'அப்பா 'பெயர' பார்த்ததும் 'கன்ஃபார்ம்' ஆயிடுச்சு...! - போன் செய்து பார்க்கையில் தெரிய வந்த உண்மை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்திஸ்கர் மாநிலத்தில் மகேந்திர சிங் தோனி, அப்பா பெயர் சச்சின் டெண்டுல்கர் என்ற பெயரில் ஆசிரியர் பணிக்கு விண்ணபித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்திஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் ஒப்பந்த ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அந்த வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்தவரின் பெயர் மகேந்திர சிங் தோனி.
அவருடய அப்பாவின் பெயர் சச்சின் டெண்டுல்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண நபர் ஒருவருக்கு மகேந்திர சிங் தோனி என்றோ சச்சின் டெண்டுல்கர் என்றோ பெயர் இருந்தால் அது பெரிய அளவிலான ஆச்சர்யம் இல்லை. ஆனால், ஒரு நபரின் பெயரும், அப்பாவின் பெயரும் இவ்வாறு இருந்தது இயல்பான ஒன்றாக தெரியவில்லை.
ஆயினும், ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தபோதும், 15 பேர் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது. அதில், தோனியும் நேர்முகத் தேர்வு தேர்வு செய்யப்பட்டிருந்தார். நேற்று நேர்முகத் தேர்வு நடைபெற்ற நிலையில், மகேந்திர சிங் தோனி வரவில்லை. உடனே விண்ணப்பத்தில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு நிர்வாகத்தினர் போன் செய்துள்ளனர். ஆனால், நம்பர் தவறாக இருந்துள்ளது. அதன்பிறகுதான் இந்த விண்ணப்பம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, அந்த மகேந்திர சிங் தோனி பெயரில் அனுப்பிய போலி நபர் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏன் இவ்வாறு அந்த நபர் விண்ணப்பித்திருந்தார் என்பது இன்னும் தெரியவில்லை. அதேநேரம் இந்த போலி விண்ணப்பம் எப்படி நேர்முகத் தேர்வு தேர்வு செய்யப்பட்டது என்று கேள்வியும் எழுந்துள்ளது. அவருடைய மதிப்பெண் 98 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்