‘பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் அபாயம்’... ‘அதனால இந்த லேப்டாப் மட்டும்’... ‘விமானங்களில் எடுத்து செல்ல தடை’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் புரோ மாடல் லேப்டாப்புகளில் குறிப்பிட்ட சில வகைகளில், பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் அயாயம் இருப்பதால், அதனை மட்டும் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் அபாயம்’... ‘அதனால இந்த லேப்டாப் மட்டும்’... ‘விமானங்களில் எடுத்து செல்ல தடை’!

கடந்த ஜூன் 20-ம் தேதி, ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில், 'ஆப்பிள் 15 இன்ச் மேக்புக் ப்ரோ வகை மடிக் கணினிகளில் உள்ள பேட்டரிகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இவை அதிகமாக வெப்பமாகின்றன. இதனால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில், விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் மேக்புக் ப்ரோ மடிக் கணினிகளில் இந்த பிரச்னை எழும்.

எனவே இதுபோன்ற பேட்டரிகளை, வாடிக்கையாளருக்கு நிறுவனம் கட்டணமின்றி மாற்றி வழங்கும். மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் உருவாக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்ட மாடலைத் தவிர, மற்ற லேப்டாப்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றும் அப்போது கூறியிருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஆப்பிள் நிறுவனத்தின், மேக் புரோ மாடல்கள் சிலவற்றில், பேட்டரி அதிக சூடாகி, தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணியர், இந்த வகை லேப்டாப்புகளை விமானப் பயணத்தின் போது, எடுத்து வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். லக்கேஜ் பெட்டிக்குள்ளோ அல்லது ஹேண்ட் பேக்குகளிலோ, இந்த மாடல் லேப்டாப்புகளை எடுத்துச் செல்ல, கட்டாயமாக அனுமதி இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

DGCA, APPLE, MACBOOKPRO