‘அதிரடி நடவடிக்கையால் மிரள வைத்த இளம்பெண்’... யார் இவர்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அதிரடி காட்டி வந்த ஐஏஎஸ் அதிகாரியான ரேணு ராஜ், ஒருநாளைகூட வீணாக்காமல், தன்னுடைய பணி நாட்களை சரியாக செய்ததாக பெருமைக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

‘அதிரடி நடவடிக்கையால் மிரள வைத்த இளம்பெண்’... யார் இவர்?

கடந்த 2014-ம் ஆண்டு நடைப்பெற்ற UPSC தேர்வில், அகில இந்திய அளவில் 2-ம் இடத்தைப் பிடித்தவர், கேரள கோட்டயத்தைச் சேர்ந்தவரான மருத்துவர் ரேணு ராஜ். தற்போது உதவி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த இவர், பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதே சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக எல்லையான மூணாறிலிருந்து, சுமார்  5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கேரள மாநிலம் இடுக்கியில், தேவிகுளம் என்ற சிறிய மலைப்பகுதி. இயற்கை எழில் கொஞ்சும்  இப்பகுதிகளில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மீது எடுத்துவந்த நடவடிக்கையே, தற்போது அவரது டிரான்ஸ்ஃபருக்கு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 10 மாதத்திற்கு முன்புதான், தேவிகுளத்தின் உதவி கலெக்டராக ரேணு ராஜ் பதவியேற்றார். அப்போது முதல் அங்கு விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்துவந்தார். அரசு கட்டிடம் மட்டுமின்றி, முறைகேடாக நிலம் வாங்கியதாகக் கூறப்படும், அரசியல் பிரமுகர் ஒருவரின் நிலப் பட்டாவை ரத்து செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரியான ரேணு ராஜ், எம்எல்ஏ ஒருவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த வீடியோ வெளியாகி பலத்த சர்ச்சையை சந்தித்தது.

இருப்பினும், ஆற்றின் கரையோரத்தில் அரசு கட்டிடம் கட்டப்பட்டதைக் கண்டித்த கேரள நீதிமன்றம், உதவி கலெக்டர் ரேணு ராஜ் எடுத்த நடவடிக்கை சரியே என்று கூறியது. தற்போது இதுதான், அவர் கடந்த மாதம் செவ்வாய்கிழமை அன்று டிரான்ஸ்ஃபர் ஆக காரணம் என்றும் தெரிவிக்கிறார்கள். தேவிகுளம் மற்றும் மூணாறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உதவி ஆட்சியர்கள் 16 பேர், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்போது ரேணு ராஜூவும் அடங்குவார். 

RENURAJ, IAS, OFFICER, KERALA, MUNNAR, DEVIKULAM