சினிமா க்ளைமாக்ஸ்தான்!!.. கஸ்டமருக்கு டெலிவரி பண்ண, ஓடும் ரெயிலை துரத்திய ஊழியர்.. என்ன ஒரு அர்பணிப்பு.!! - நெகிழும் நெட்டிசன்கள்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில் உணவு, உடை தொடங்கி எந்த ஒரு பொருளாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்கின்றனர்.
நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள், நேரடியாக உணவகங்களுக்கு சென்று உணவு அருந்துவதை விட ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்பதையே அதிகம் விரும்பும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அது மட்டுமில்லாமல், உணவு, உடை, மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் தாண்டி, மளிகை பொருட்கள் முதல் மருந்து பொருட்கள் என நமக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையே இருந்த இடத்தில் இருந்து வாங்கும் வசதி அதிகரித்து விட்டது என்பதால், சவுகரியமாக இருப்பதால் இது போன்ற வழிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
டெலிவரி ஊழியர்கள் நகர பகுதிகளில் அதிகம் இயங்கி வருவதால், அவர்கள் தொடர்பான செய்தி அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆவது கூட வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட வெளியூரில் இருக்கும் மகன் குறித்து டெலிவரி ஊழியர் ஒருவர் மூலம் வயதான தம்பதி அறிந்து கொண்ட விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது டெலிவரி ஊழியர் ஒருவர் செய்துள்ள காரியம் தொடர்பான செய்தி, பலரது பாராட்டுக்களையும் பெற்று கொடுத்துள்ளது.
டன்சோ என்ற டெலிவரி நிறுவனம், இந்திய அளவில் பல நகரங்களில் மளிகை பொருட்கள், காய்கறி, உணவு, உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருளை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. அப்படி இருக்கையில், நபர் ஒருவர் ரயிலில் இருந்தபடி ஆன்லைனில் பொருள் ஏதோ ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆர்டரை எடுத்த டன்சோ ஊழியரும் நேராக ரெயில் நிலையம் வந்துள்ளார்.
ஆனால், அவர் ரெயில் நிலையம் வந்து சேர்வதற்குள், அவர் சேர்க்க வேண்டிய நபரின் ரெயில் மெல்ல மெல்ல பிளாட்ஃபார்மை விட்டு விலக ஆரம்பித்துள்ளது. மறுபுறம், வாசல் அருகே நின்ற படி அந்த பெண்ணும் வேகமாக வருமாறு சைகை காட்ட, கையில் பார்சலுடன் அந்த டெலிவரி ஊழியரும் வேகமாக அந்த பெண்ணை நோக்கி ஓடுகிறார். இறுதியில், அந்த பெண்ணிடம் பார்சலையும் டெலிவரி ஊழியர் சரியாக சேர்க்கும் நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் டெலிவரி ஊழியரின் அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சியை பெரிய அளவில் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்