'வேறெதும் தேவயில்ல.. மனசுதான்'.. 'உணவு டெலிவரி பாய்' செய்யும் உன்னத காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தாவில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் எடுத்த நெஞ்சை நெகிழவைக்கும் காரியத்தை பலரும் பராட்டி வருவதோடு, அவருடன் பலரும் கைகோர்க்கின்றனர்.
கொல்கத்தாவில் மாநகராட்சி ஊழியராக பணியாற்றி வந்தவர் சாஹா என்பவர். இவர் ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் அந்த பணியைத் துறந்துவிட்டு ஸொமாட்டோவில் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதோடு, ஆதரவற்ற-வசதிகளற்ற குழந்தைகளுக்கான பாடங்களை கற்றுத் தருவது, அவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது உள்ளிட்ட சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
மட்டுமின்றி, ஸொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்யும் எத்தனையோ கஸ்டமர்கள் தாங்கள் செய்யும் ஆர்டர்களை கேன்சல் செய்துவிடுகின்றனர். அப்போதில் இருந்து இப்போதுவரை கேன்சல் செய்யப்படும் உணவுகளை பசியால் வாடும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்குக் கொண்டுவந்து அளிப்பதில் மகிழ்கிறார்.
இவரின் இந்த காரியங்களைப் பார்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் பலரும் தங்கள் ஹோட்டலில் மீதமாகும் உணவுகளை இவருக்கு கொடுத்து குழந்தைகளுக்கு அளிக்கச் சொல்லுகின்றனர். இதேபோல் சாஹாவும், தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களிடம் இந்த சேவையைச் செய்யச் சொல்லி கோரியிருக்கிறார். மனிதர் நோக மனிதர் காணும் வாழ்க்கை இனி உண்டோ என்கிற வரிகள் சாஹா நிரூபித்துள்ளார் எனலாம்.