'சார், சார் ஒரு சின்ன பொண்ணு டேங்கர் லாரி ஓட்டிட்டு போகுது'... 'லைசென்ஸை பார்த்த போலீசாருக்கு காத்திருந்த ஷாக்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண்களின் வட்டம் சிறிது அவர்கள் அதை தாண்டி வரமாட்டார்கள் என்பதை உடைத்திருக்கிறார் கேரள மாணவி ஒருவர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் டெலிஷா டேவிஸ். இவர் முதுகலை கல்லூரி மாணவி. காலையில் டிரைவிங் மாலையில் கல்லூரிப் படிப்பு என பேலன்ஸ் செய்து வருகிறார். தேர்வுகள் முடிந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். டெலிஷா டேவிஸ் அப்பா டேங்கர் லாரி ஓட்டுநர் 40 வருடமாக அவர் இந்த பணியைச் செய்துவருகிறார்.
தந்தையைப் பார்த்துத் தான் டெலிஷாவுக்கு லாரி ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. கேரள சாலைகளில் அசால்டாக டிரைவிங் செய்யும் டெலிஷா டூ-வீலர், ஃபோர் வீலர், 6 சக்கரங்களை உடைய வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸூம் வைத்திருக்கிறார். ஒரு நாளைக்கு 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் டெலிஷாவிடம் உங்களுக்கு இது கடினமாக இல்லையா எனக் கேட்டால், இந்த வேலையை நான் காதலிக்கிறேன் அப்புறம் எப்படி கடினமாக இருக்கும் எனப் பதிலளிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அதிகாலை 2.30 மணிக்கு லாரியை எடுத்துக்கொண்டு இரும்பனம் புறப்படுவோம். கம்பெனி காலையில் திறப்பார்கள். அங்கிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை டேங்கரில் ஃபுல் செய்துகொண்டு மலப்புரம் மாவட்டம் திரூர் பயணமாவோம். வழியில் எங்கும் லாரியை நிறுத்த மாட்டோம். வண்டியில் இருக்கும் சரக்கை இறக்கிவிட்டால் மீண்டும் திரும்பி விடுவோம்.
3 வருடமாக என்னை யாரும் நிறுத்தியது இல்லை. டேங்கர் லாரி அத்தியாவசிய பொருள் என்பதால் போலீஸார் நிறுத்த மாட்டார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு போலீசார் லாரியை நிறுத்தியுள்ளார்கள். ஊரடங்கு காலத்துல சின்ன பொண்ணு லாரியை ஓட்டிக்கிட்டு ஹைவேஸ்ல போறதா யாரோ ஆர்டிஓ சொல்லி இருப்பாங்க போல அதனால் போலீஸ் நிறுத்துனாங்க எனக் கூறும் டெலிஷா, போலீசாரிடம் எனது ஹெவி லைசென்ஸை காட்டியதும் ஷாக் ஆகி விட்டார்கள் என கூறியுள்ளார்.
போலீசார் டெலிஷா குறித்து மீடியாவிடம் கூறிய நிலையில் அவர் தற்போது கேரளா முழுவதும் பிரபலமாகி விட்டார். அதேபோன்று கேரளாவிலே அபாயகரமான பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனத்தை ஓட்டும் உரிமம் வைத்துள்ள பெண் டெலிஷா தான் என போலீசார் கூறியுள்ளனர். அடுத்து டெலிஷாவின் கனவு மல்டி ஆக்சில் வால்வோ பஸ் ஓட்ட வேண்டும் என்பது தான்.
தற்போது அதற்கான லைசென்ஸ் எடுக்க முயற்சி செய்து வருவதாகக் கூறியுள்ள டெலிஷா டேவிஸ், சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் நிச்சயம் ஒரு எடுத்துக்காட்டு தான்.
மற்ற செய்திகள்