கணவனை பிரிஞ்சு காதலனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண் எடுத்த விபரீத முடிவு.. வீட்டை செக் பண்ணப்போ சிக்கிய லெட்டர்.. உறைந்துபோன போலீசார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் கணவனை பிரிந்து காதலனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த பெண் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | சோகத்தில் முடிந்த கிக்பாக்சிங் போட்டி.. கோமா நிலைக்கு போன இளம் வீரருக்கு நேர்ந்த துயரம்..!
டெல்லியில் ஜெய்த்பூர் பகுதியை சேர்ந்த காவல்துறையினருக்கு கடந்த ஜூலை 5 ஆம் தேதி, ஒரு போன்கால் வந்திருக்கிறது. அதில், அந்த பகுதியில் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் உடனடியாக வரும்படியும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே கிடந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்கும்போது அவருக்கு லேசாக துடிப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.
சோகம்
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் பெண்ணை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த பெண்ணினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து பெண்ணின் வீட்டுக்கு திரும்பிய போலீசார், பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த அறையில் அந்த பெண் எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அதனை படித்துப் பார்த்த காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
அதிர்ச்சி
33 வயதான அந்த பெண் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை பிரிந்திருக்கிறார். அதனை தொடர்ந்து ஜெய்த்பூர் பகுதியில் உள்ள காதலரின் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டுகெதரில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தனது காதலன் மூலமாக 14 முறை கர்ப்பமானதாகவும் ஆனால், அவற்றை கலைக்கும்படி அவர் வறுபுறுத்தியதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகவும் அந்த பெண் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருமணம் செய்துகொள்ளவும் அந்த ஆண் தொடர்ந்து மறுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து சாஃப்ட்வெர் என்ஜினியராக பணிபுரியும் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வழக்கு
இதனிடையே அந்த ஆண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெண்ணின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக டெல்லி தென்கிழக்கு மண்டல டிசிபி ஈஷா பாண்டே தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில், கணவரை பிரிந்து காதலருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்துவந்த பெண் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
Also Read | "அதை முதல்ல நிறுத்துங்க"... ட்விட்டர் CEO-க்கு வார்னிங் மெசேஜ் அனுப்பிய எலான் மஸ்க்.. என்ன ஆச்சு.?
மற்ற செய்திகள்