"12 கிலோ மீட்டர்".. காருக்கு அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்?.. நடந்தது என்ன?.. திடுக்கிடும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில், ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மாநிலத்தில் கன்ஜாவ்லா - சுல்தான்புரி என்னும் பகுதியில், புத்தாண்டு தினத்தன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இளம் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில் அப்பகுதியில் வந்த கார் ஒன்று அந்த, இளம்பெண் பயணித்த ஸ்கூட்டியின் மீது வேகமாக மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விபத்து நடந்த போதிலும் அந்த கார் நிற்காமல் படுவேகமாக சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்கூட்டியை இடித்த அதே வேகத்தில் அந்த இளம் பெண் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் அந்த கார் வாகனத்தை நிறுத்தாமல் சென்றபடியே இருக்க இதனை கவனித்த அப்பகுதியைச் சென்ற நபர் ஒருவர் உடனடியாக காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளார்.
இதற்கடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு இளம் பெண்ணின் உடல் ஒன்று சாலை அருகே கிடப்பதாக போலீசாருக்கு மற்றொரு தொலைபேசி அழைப்பும் வந்துள்ளது. இந்த இரண்டு பெண்களும் ஒரே ஆள் தான் என்பது உறுதியான நிலையில், அவரது உடலை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், நீண்ட தூரத்திற்கு காரில் சிக்கி இழுத்து வரப்பட்டதால் அதிக காயங்கள் காரணமாக அந்த பெண் உயிரிழந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்கூட்டியில் வந்த இளம் பெண் மொத்தம் 12 கிலோ மீட்டர் தூரம் வரை காருக்கு அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட திடுக்கிடும் தகவலும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காரில் பயணம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்கூட்டியை மோதியது அவர்களுக்கு தெரியும் என்றும், ஆனால் காரிலேயே இத்தனை தூரம் பெண் சிக்கி இழுத்து வரப்பட்டது தங்களுக்கு தெரியாது என்றும் காரில் இருந்தவர்கள் விசாரணையில் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்ற்து.
அதே வேளையில், இத்தனை கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு ஏராளமானோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதே போல, பெண்ணின் குடும்பத்தினர் கூட அவரது மகளுக்கு நேர்ந்த சம்பவத்திற்கு முறையாக விசாரித்து, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்