'காத்திருந்த சந்தோசமான செய்தி'... 'ஆனா இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் மனைவி'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பெருந்தொற்று பல மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் சோதனைகளை ஏற்படுத்தி வருகிறது.

'காத்திருந்த சந்தோசமான செய்தி'... 'ஆனா இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் மனைவி'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!

டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சேத்தன் ஜசல். இவரது கணவர் பவன் குமார். இருவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பவன் உடல் நிலை மோசமானது. ஆனால் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால் பல வழிகளில் முயற்சி செய்து சண்டிகருக்குக் கணவரை உறவினர்கள் உதவியுடன் ஜசல் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.கணவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் ஜசலின் உடல்நிலையும் மோசமான நிலைக்குச் சென்றது. ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் பவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Delhi University professor dies of Covid-19 days after her husband

ஆனால் இதுகுறித்து எதுவும் அறியாத ஜசல், நேற்று பரிதாபமாக அவரும் உயிரிழந்தார். இதனிடையே ஜசல் பணிபுரிந்த கல்லூரியின் முதல்வர் ஹர்பிரீத் கவுர் கூறுகையில், ''விரைவில் ஜசலுக்கு கல்லூரில் பதவி உயர்வு கிடைக்கவிருந்தது. அந்த மகிழ்ச்சியான தகவலை அறியாமல் இறந்துவிட்டார். பவன் மற்றும் ஜசல் மரணம் அதிர்ச்சியளிக்கிறது, கல்லூரியின் மட்டத்தில், நாங்கள் குடும்பத்திற்கு உதவ முயற்சிக்கிறோம்'' எனக் கூறியுள்ளார்.

Delhi University professor dies of Covid-19 days after her husband

பத்து நாட்கள் இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் கொரோனாவின் கோர முகத்தைத் தினமும் மக்களுக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.

அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் தற்போது கொரோனாவிற்கு எதிராக இருக்கும் பெரிய ஆயுதம். எனவே மக்கள் அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

மற்ற செய்திகள்