நடு வானில் உடைந்த விமானத்தின் windshield.. கட்டுப்பாட்டு அறைக்கு பறந்த தகவல்.. கடைசி நேரத்துல விமானி எடுத்த துணிச்சலான முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் இருந்து கௌஹாத்தி சென்ற விமானம் நாடு வானில் சென்றுகொண்டிருந்த போது windshield உடைந்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.
Also Read | "என் மூலமா புது எலான் மஸ்க்-அ உருவாக்க டீல் போட்டாங்க".. மஸ்க்கின் அப்பா வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, டெல்லியில் இருந்து இன்று மதியம் 12:40 மணிக்கு கௌஹாத்திக்கு புறப்பட்டிருக்கிறது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டேக் ஆஃப் ஆன உடனேயே அதன் முகப்பு கண்ணாடியில் (windshield) விரிசல் ஏற்பட்டிருக்கிறது. விமானம் மேலே எழும்பும்போது, கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகவே விமானிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தரையிறங்கிய விமானம்
மேலும், விமானத்தை மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கு திருப்ப அனுமதி கேட்டிருக்கிறார் விமானி. ஆனால், டெல்லியில் கடுமையாக மழை பெய்ததால் விமானத்தை டெல்லியில் தரையிறக்க அனுமதி வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து, உடனடியாக விமானத்தை ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்குமாறு விமானிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, அவசரமாக விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று மதியம் 2.55 மணிக்கு தரையிறக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பேசிய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவின் பொது இயக்குநர் அருண் குமார்,"விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார்.
இதே விமான நிறுவனத்தை சேர்ந்த இரண்டு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று அவசரமாக தரையிக்கப்பட்டன. மும்பையில் இருந்து லே சென்ற விமானமும், ஸ்ரீநகரில் இருந்து டெல்லி சென்ற விமானமும் எஞ்சினில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவசரமாக தரையிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பில் சமரசம் கூடாது
சமீப நாட்களில் விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிக்கப்படுவது அதிகளவில் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து ஜூலை 17 அன்று, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பாதுகாப்புச் சிக்கல்கள் தொடர்பாக MoCA-வின் மூத்த அதிகாரிகள் மற்றும் DGCA அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்று அதிகாரிகளிடத்தில் சிந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்