"600 ஈமெயில் அனுப்புனேன்".. விடா முயற்சியுடன் வேலைதேடிய இந்திய மாணவர்.. கடைசில அடிச்சது பாருங்க ஜாக்பாட்.. !
முகப்பு > செய்திகள் > இந்தியாவிடா முயற்சியுடன் வேலை தேடிய இந்திய மாணவர் ஒருவருக்கு உலக வங்கியில் பணி கிடைத்திருக்கிறது. இதுகுறித்து அவர் எழுதிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா 2020 ஆம் ஆண்டு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகினர். இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்த பின்னர், உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. கொரோனா உச்சமடைந்த நேரத்தில் உலக அளவில் வேலைவாய்ப்பின்மை குறித்த அச்சம் எழுந்தது.முன்னணி நிறுவனங்கள் கூட, தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.
இந்திய மாணவர்
அந்த சூழ்நிலையில், படிப்பை முடித்துவிட்டு, வேலைதேடிய இளைஞர்கள் பட்ட சிரமங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அப்படி பல இன்னல்களை சந்தித்தவருள் ஒருவர்தான் வத்சல் நஹதா. டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பட்டம் பெற்று, யேல் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தவர் இவர். தன்னுடைய கடைசி ஆண்டு படிப்பின் போது, கொரோனா காரணமாக வேலை தேடுவதில் சிக்கல்களை சந்தித்தாகவும், இறுதியில் உலக வங்கியில் வேலை கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். தன்னுடைய வேலை தேடும் பயணம் எவ்வாறு இருந்தது? என்பதை தனது LinkedIn பக்கத்தில் எழுதியிருக்கிறார் இவர்.
கனவு
அதில்,"COVID-19 ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது. பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவந்தன. உலக அளவில் மந்தநிலை ஏற்பட்டதாக தோன்றியது. டொனால்டு ட்ரம்பின் குடியேற்ற கொள்கை காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க பட்டதாரிகளையே வேலைக்கு எடுக்க முன்வந்தன. நான் 1500 க்கும் மேற்பட்ட இணைப்பு கோரிக்கைகளை அனுப்பினேன். 600 மின்னஞ்சல்களை அனுப்பியிருந்தேன். சுமார் 80 பேருக்கு போன் செய்திருப்பேன். யாராவது எனக்கு மீண்டும் போன் செய்வார்கள் என கனவுகண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கி
இத்தனை போராட்டங்களுக்கு பிறகு வத்சல் நஹதாவிற்கு அந்த ஆண்டு மே மாதத்தில் நான்கு இடத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அழைப்பு வந்திருக்கிறது. அதில் உலக வங்கியும் ஒன்று. வத்சல் நஹதா உலக வங்கியில் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறார். நஹதா உலக வங்கியின் கல்வி உலகளாவிய நடைமுறையின் ஆலோசகராக தனது பணியை தொடங்கினார். அவர் இப்போது சர்வதேச நாணய நிதியத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராக உள்ளார். 23 வயதான இவர், அமெரிக்காவில் தனது அனுபவம் மதிப்புமிக்க பாடங்களை தனக்கு கற்றுக் கொடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு பாலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்