வீடியோ:'போலீசாரை' சுற்றிவளைத்து தாக்கிய 'கும்பல்'... வன்முறையாளர்களின் கொலைவெறித் 'தாக்குதல்'... 'டெல்லி' கலவரக் காட்சிகளை வெளியிட்ட 'போலீசார்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந்தேதி மோதல்  குறித்த வீடியோ காட்சிகளை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ:'போலீசாரை' சுற்றிவளைத்து தாக்கிய 'கும்பல்'... வன்முறையாளர்களின் கொலைவெறித் 'தாக்குதல்'... 'டெல்லி' கலவரக் காட்சிகளை வெளியிட்ட 'போலீசார்'...

இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 4 நாட்கள் நடைபெற்ற இந்த கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், 24ம் தேதி நடந்த கலவரம் குறித்த வீடியோ காட்சிகளை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், டெல்லியின் வடகிழக்கு பகுதியான சாந்த் பாக் பகுதியில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்த போது, பாதுகாப்பு பணியில் இருந்த 50 போலீசாரை கலவரத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் இருபுறமும் இருந்து வேகமாக ஓடிவந்து தாக்குகின்றனர்.

நடுவில் மாட்டிக் கொண்ட போலீசார் கலவரக்காரர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்கச் செய்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.  இதனால் சற்று பின்வாங்கிய கலவரக்காரர்கள் பின்னர் மீண்டும் வந்து போலீசாரை விரட்டி விரட்டி கம்புகளை கொண்டும், கற்களை கொண்டும் தாக்குகின்றனர்.

ஒரு சாலையிலிருந்து மற்றொரு சாலைக்கு தப்பிச்செல்ல முயன்ற போலீசார் நடுவில் அமைக்கப்பட்டிருந்த பாரிகாட் மீது ஏறி தாவிக்குதித்து ஓடுகின்றனர். இதையடுத்து மரங்கள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பாக பதுங்கினர். இந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.வன்முறையின் போது பெண்கள் கற்களை வீசி தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த தாக்குதலில் காயமடைந்த காவல் அதிகாரி அமித்ஷர்மாவை மற்ற போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்.

DELHI, RIOT, VIDEO, DELHI POLICE