VIDEO: ‘அவரை ஒன்னும் பண்ணாதீங்க’!.. போராட்ட களத்தில் ‘தனியாக’ சிக்கிய போலீஸ்.. தலைநகரை திரும்பி பார்க்க வச்ச மனிதம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி போராட்ட களத்தில் தனியாக சிக்கிய போலீசை விவசாயிகள் சிலர் அரணாக நின்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘அவரை ஒன்னும் பண்ணாதீங்க’!.. போராட்ட களத்தில் ‘தனியாக’ சிக்கிய போலீஸ்.. தலைநகரை திரும்பி பார்க்க வச்ச மனிதம்..!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். அப்போது போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட வழிகளை தவிர மற்ற வழிகளில் விவசாயிகள் செல்ல முயன்றதால் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து தடியடி, கண்ணீர் குண்டு வீசி விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அனுமதிக்கப்பட்ட வழிகளிலேயே தாங்கள் செல்வதாகவும் வேண்டுமென்றே சிலர் வன்முறை தூண்டுவிடுவதாகவும் விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளன.

தொடர்ந்து வெடிக்கும் வன்முறையால் டெல்லியில் பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகள் சிலர் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுக்க போலீசார் நாங்லோயில் சாலையில் அமர்ந்துள்ளனர். இதற்கிடையே டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் அங்குள்ள கோபுரத்தில் தங்களது கொடியை ஏற்றினர்.

இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தனியாக போலீஸ் ஒருவர் சிக்கிக் கொண்டார். உடனே போராட்டக்காரர்கள் அவரை தாக்க முயன்றனர். இதைப் பார்த்த விவசாயிகள் சிலர் அவர்களிடம் இருந்து காப்பாற்றி அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இத்தனை வன்முறைகளுக்கு மத்தியிலும் போலீஸ் ஒவரை விவசாயிகள் காப்பாற்றிய மனிதம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்