VIDEO: 'திருடர்களை தெறிக்க விட்டு குழந்தையை மீட்ட தாய்...' அவரா என் குழந்தைய கடத்த திட்டம் போட்டது...? 'அதிர்ச்சியில் தாய்...' - வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் தன் மகளை கடத்த முயன்ற இளைஞர்களை தாய் ஓடிவந்து அடித்து காப்பாற்றும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு பைக்கில் வந்த இரு இளைஞர்கள் தங்களை சேல்ஸ்மேன் என அடையாளப்படுத்திக் கொண்டு தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது வீட்டில் பெண்மணியும் அவரது 4 வயது மகளும் இருந்துள்ளனர். தண்ணீர் கொண்டு வருவதற்காக சிறுமியின் அம்மா வீட்டிற்கு உள்ளே சென்ற போது பைக்கில் வந்த இரு இளைஞர்களில் ஒருவர் சிறுமியை தூக்க முயற்சித்தார்.
ஆனால் சுதாரித்துக்கொண்ட 4 வயது சிறுமி அம்மா அம்மா என கத்த தொடங்கியுள்ளார். குழந்தையின் அலறல் கேட்டு வெளியே வந்த தாய் பைக்கில் இருந்த இளைஞரின் கையில் இருந்த குழந்தையை பிடிங்கி கத்த தொடங்கினார்.
இந்த சம்பவம் குறித்தான சி.சி.டி.வி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் விசாரணை நடத்தியதில் இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் குழந்தையின் தாய் மாமனே பணத்திற்காக குழந்தையை கடத்த ஆள் வைத்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், குடும்பத்தாரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS