'வீட்ட வாடகைக்கு தானே விட்ருக்கோம்னு...' 'நிம்மதியா இருந்த மனுஷன்...' 'திடீர்னு வந்த போன்கால்...' - உச்சக்கட்ட ஷாக் ஆன ஹவுஸ் ஓனர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் சூரஜ்மால் பகுதியில் சொந்த வீடுக் கட்டி அதை வாடகைக்கு விட்டுள்ளார் ரீட்டா பாபர். கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் சர்மா, சச்சின் சர்மா மற்றும் இவர்களது தந்தை மங்கேராம் சர்மா ஆகியோர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். மேலும் 2016 ஆம் ஆண்டோடு பத்திர ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வாடகைகான ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தொடர்ந்து வசித்தனர்.
இந்நிலையில் டெல்லி சுரஜ்மால் வீட்டின் உரிமையாளர் ரீட்டா பாபரின் கணவருக்கு ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து போன் அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், சூரஜ்மால் வீ்ட்டின் பேரில் 2.25 கோடி வீட்டு கடன் பெற்றுள்ளதாகவும் தற்போது தவணையை கட்டவில்லை என்றும் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறினர்.
இதனை அதிர்ச்சியடைந்த ரீட்டா பாபரின் கணவர், விசாரித்த போது அவர்களின் வீட்டின் பேரில் மேலும் இரண்டு நிதி நிறுவனங்களில் முறையே 2.19 கோடி மற்றும் 2.25 கோடி கடன் பெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்ததின் பெயரில் போலீசார் சுனில் ஆனந்த் என்பரை கைது செய்துள்ளனர். மேலும் ராகுல் சர்மாவின் பேரில் போலி ஆவணங்களை தயார் செய்து வங்கிகளில சமர்பித்து கடன்பெற்றது தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் மூன்று பேர் சேர்ந்து இந்த போலி ஆவணங்களை தயாரித்துள்ளதும், ரீட்டாவின் கணவர் பாபா் இறந்துவிட்டதாக கூறி சான்றிதழ் பெற்று மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோசடி சம்பவத்தில் வேறு யாராவது உள்ளனரா என விசாரணை நடைபெற்று வருவதாக இணை கமிஷனர் (பொருளாதார குற்றப்பிரிவு) ஓபி சர்மா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்