வேலையில்லாததால் வந்த 'தகராறு'... கணவரின் 'தலையை' தாண்டி... கர்ப்பிணி மனைவியின் 'கழுத்தில்' பாய்ந்த 'புல்லட்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுருக்ராம் அடுத்து ராம்பூரா பகுதியில் வசித்து வரும் 34 வயதான நபர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக் கொண்டு செக் அப்பிற்காக மருத்துவமனை சென்றுள்ளார்.

அப்போது, இருவரும் காரில் இருந்த போது, கணவருக்கு பல மாதங்களாக வேலையில்லாதது குறித்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களிடையே வாக்குவாதம் வலுக்கவே, கோபத்தில் அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கி எடுத்து சுட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். தனது காதுப் பகுதியில் சுட்டுள்ளார். காது பகுதியில் அந்த நபர் சுட்ட நிலையில், அந்த புல்லட் அவரின் தலையை துளைத்து மறுபக்கமாக வெளியே வந்து மனைவியின் கழுத்தை குறி பார்த்துள்ளது.
அப்போது, அந்த பகுதியில் இருந்த ஒருவர், சந்தேகத்தின் பெயரில் காருக்குள் பார்த்த போது இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தனது கணவருக்கு வேலையில்லாதது குறித்து ஏற்பட்ட தகராறில் கணவர் துப்பாக்கியை எடுத்து தற்கொலை செய்ய முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த நபர் பயன்படுத்திய துப்பாக்கியில் 7.62 மிமீ புல்லட் பயன்படுத்தப்பட்ட நிலையில், அந்த துப்பாக்கிக்கு அவரிடம் லைசென்ஸ் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்




