'துப்பாக்கி வெடித்ததால்.. நண்பன் பலி'.. 'டிக் டாக்' வீடியோ விபரீதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டுத் துப்பாக்கியுடன், டிக்-டாக் வீடியோ பதிவுசெய்ய முயன்ற மாணவர்களின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்துள்ளது.

'துப்பாக்கி வெடித்ததால்.. நண்பன் பலி'.. 'டிக் டாக்' வீடியோ விபரீதம்!

ஸ்மார்ட்போனில் தற்போது டாப் இடத்தில் இருப்பது டிக்-டாக் மற்றும் பப்ஜி ஆகிய இரண்டு ஆப்கள்தான். இரண்டுமே அளவுக்கு அதிகமாகச் செல்வதால் நாளுக்கு நாள் விபரீதங்களும் பெருகி வருகின்றன. அவைகள் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்த தவறுவதில்லை. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லியின் ஜப்ராபாத் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான 19 வயது சல்மான்,  தனது நண்பர்களுடன் சனிக்கிழமையன்று இரவு, காரில் இந்தியா கேட் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு, டிக்-டாக் மூலம் துப்பாக்கியை வைத்து வீடியோ பதிவு செய்ய நண்பர்கள் முயன்றுள்ளனர். காரின் ஓட்டுநர்  சீட்டில் அமர்ந்திருந்தவாறு, சல்மானின் கண்ணத்தில் நாட்டு துப்பாக்கியை மற்றொரு நண்பரான சோகைல் வைத்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தது. இதில், கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்ததால் சல்மான் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள், சல்மானின் உறவினர்கள் வீட்டுக்கு அவரை ரத்த வெள்ளத்தில் அழைத்துச் சென்றனர். உறவினர்கள் சல்மானை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்

ஆனால், சல்மான்  உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, மருத்துவமனையிலிருந்து நண்பர்கள் மூவரும் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை அடுத்து, தப்பி ஓடிய மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. தவறுதலாக குண்டு வெடித்ததா அல்லது வேண்டுமேன்றே நண்பர்கள் செய்தார்களா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TIKTOK, DELHI, SHOTDEAD, TEEN, VIDEO, GUN