Veetla Vishesham Mob Others Page USA

"நான் என்ன கேட்டேன்.. நீங்க எதை அனுப்பிருக்கீங்க?".. ஆன்லைனில் உணவு ஆர்டர் செஞ்சது ஒரு குத்தமா? வைரல் வீடியோ.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைனில் ஆசையாக உணவு ஆர்டர் செய்த இளைஞர் ஒருவருக்கு, ஷாக் கொடுத்திருக்கிறது உணவகம் ஒன்று. தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"நான் என்ன கேட்டேன்.. நீங்க எதை அனுப்பிருக்கீங்க?".. ஆன்லைனில் உணவு ஆர்டர் செஞ்சது ஒரு குத்தமா? வைரல் வீடியோ.!

Also Read | "வெளிநாட்டுக்கு வேலைக்கு ஏஜெண்ட்-கிட்ட பணம் கொடுக்குறதுக்கு முன்னாடி இதையெல்லாம் செக் பண்ணுங்க"..சென்னை காவல்துறை கொடுத்த அட்வைஸ்..!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித குலத்திற்கு ஏராளமான கொடைகளை அளித்துள்ளது. நம்மால் கண் இமைக்கும் நேரத்தில் இணையத்தின் உதவியுடன் ஏராளமான பணிகளை மேற்கொள்ள முடிகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள். இதன்மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்தே உணவை பெற்று, ருசிக்க முடிகிறது. ஆனால், சில நேரங்களில் நாம் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்துவிடுவதும் உண்டு. அப்படித்தான் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் நடந்துள்ளது. சோகத்தில் அவர் போட்ட  வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனியன் ரிங்

டெல்லியை சேர்ந்தவர் ஒபைது. இவர் சமீபத்தில் உணவகம் ஒன்றிலிருந்து ஆனியன் ரிங் ஆர்டர் செய்திருக்கிறார். தனது பார்சலுக்காக ஒபைது காத்திருக்க, கொஞ்ச நேரத்திலேயே அவர் எதிர்பார்த்தது போலவே பார்சலும் வந்திருக்கிறது. ஆசையுடன் தனது உணவு பார்சலை ஒபைது பிரிக்கும் போதுதான் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், உள்ளே இருந்தது சமைக்கப்படாத வெங்காயம். அதை வட்ட வடிவமாக வெட்டி அனுப்பியுள்ளனர் அந்த உணவகத்தினர்.

Delhi man got raw onion after he ordered onion rings

வைரல் வீடியோ

இந்நிலையில், பார்சலை பிரித்ததும் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,"நான் உணவகம் ஒன்றிலிருந்து ஆனியன் ரிங் ஆர்டர் செய்திருந்தேன். எனக்கு என்ன வந்திருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்" எனக் குறிப்பிட்டு பார்சலை காண்பிக்கிறார் அவர். அதில்  வட்டமாக வெட்டப்பட்ட சமைக்கப்படாத வெங்காயங்கள் இருப்பது தெரிகிறது.

இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவ," நீங்கள் சொன்ன அதே ஆனியன் ரிங்-கைத்தான் அவர்களும் அனுப்பியிருக்கிறார்கள்" என்றும் "இதனால் தான் எனக்கு ஆன்லைன் உணவுகள் மீது எப்போதும் ஒரு பயம் இருக்கிறது" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by UbaidU (@ubaidu_15)

Also Read | "கணவருக்கு ஆண்மையில்லை".. சொந்த பந்தம் முன்னாடி பொய் சொன்ன மனைவிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி..!

 

DELHI, MAN, DELHI MAN GOT RAW ONION, ONLINE ORDER, ONION RINGS

மற்ற செய்திகள்