"சாப்பாடு போட முடியுமா? முடியாதா?".. போதையில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவருக்கு காலையில் காத்திருந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரவு உணவு பரிமாறவில்லை என மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சுல்தான்பூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் தூபே. 47 வயதான இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது மனையுடன் ஒன்றாக அமர்ந்து தூபே மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, தனக்கு சாப்பாடு எடுத்துவைக்கும்படி தூபே கூறியிருக்கிறார். ஆனால், அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது.
கண்ணை மறைத்த கோபம்
இரவு உணவை எடுத்து வைக்காததால் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் வினோத். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, தனது மனைவியை வினோத் தாக்கியதாக தெரிகிறது. அதன் பிறகு காலையில் எழுந்த பிறகே வினோத்திற்கு விபரம் தெரிந்திருக்கிறது. இரவு நடைபெற்ற சண்டையில் பலத்த காயமடைந்த வினோத்தின் மனைவி அப்போதே உயிரிழந்திருக்கிறார். மது போதையில் இருந்ததால், உயிரிழந்த மனைவியின் உடலருகே தான் தூங்கியது காலையில் தான் வினோத்திற்கு தெரியவந்திருக்கிறது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து வினோத்தின் அண்டை வீட்டார் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிலிருந்து தப்பிக்க முயன்ற வினோத் குமாரை மடக்கி பிடித்தனர்.
விசாரணை
அவரிடம் நடத்திய விசாரணையில் மது போதையில் தனது மனைவியை தாக்கியதாக கூறியுள்ளார் வினோத். காவல்துறையிடம் மாட்டிக்கொள்வோம் என பயந்த வினோத் 40,000 ரூபாய் பணத்துடன் தான் வீட்டிலிருந்து தப்பிச்செல்ல முடிவெடுத்த போதுதான் சரியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்திருக்கின்றனர். இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 259, 202, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பேசிய கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் பவன் குமார்," சம்பவம் நடந்த அன்று தம்பதியினர் இருவரும் மது போதையில் இருந்திருக்கின்றனர். அப்போது உணவு பரிமாறவில்லை என வினோத் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனிடையே அவரது மனைவி வினோத்தை அறையவே, பழிவாங்கும் நோக்கில் வினோத் தனது மனைவியை திரும்பித் தங்கியிருக்கிறார். இதனால் மனைவி உயிரிழந்ததை அடுத்த நாள் அறிந்த வினோத் 43,280 ரூ பணம், ரத்த கறை படிந்த தலையணைகள் உள்ளிட்ட பொருட்களுடன் தப்பிச்செல்ல இருந்தார். ஆனால், காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் அவர் உடனே கைதுசெய்யப்பட்டார்" என்றார்.
டெல்லியில், இரவு உணவு பரிமாறவில்லை என கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்