ஆளே இல்லாத வீடு.. "அங்க இருந்த ஃப்ரிட்ஜ் கதவ தொறந்தப்போ.." அதிர்ந்த போலீசார்.. குலை நடுங்க வைத்த சம்பவம்
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில தினங்களுக்கு முன், தனது உறவினர் ஒருவர் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என ஒருவர் காவல் துறைக்கு அழைத்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரித்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
Also Read | மீனவர்கள் வலையில் சிக்கிய திமிங்கல வாந்தி.. "அம்மாடியோவ், இத்தனை கோடி ரூபா மதிப்பா இதுக்கு??.."
வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இருந்து, ஜாகீர் என்பவரின் மருமகன் காசிஃப், போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.
முன்னதாக, தனது மாமாவான ஜாகீர் போனில் அழைத்த போது, அவர் அழைப்பை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதே போல, தனது தாயுடன் ஜாகீர் வீட்டிற்கும் காசிஃப் சென்று பார்த்துள்ளார். அப்போது, அவரது வீட்டை தட்டி பார்த்தும் கதவு திறக்கவில்லை என கூறப்படுகிறது. ஜாகீர் கதவை திறக்காத காரணத்தினால், வீட்டிற்குள்ளும் சென்று பார்த்துள்ளார் காசிஃப்.
அந்த வேளையில், வீட்டுக்குள் ஜாகீரை காணவில்லை என கூறப்படுகிறது. ஆனால், அவரின் நகை பெட்டி மற்றும் அவரது அலமாரி முழுவதும் சேதமடைந்து கிடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, அவரின் வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜும் கட்டப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், சற்று அதிர்ச்சியில் இருந்த காஃசிப், உடனடியாக போலீசாருக்கு அழைத்து, மாமாவான ஜாகீர் போனை எடுக்கவில்லை என்றும், அவரை வீட்டில் காணவில்லை என்றும் கூறி உள்ளார்.
தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், ஃப்ரிட்ஜை திறந்து பார்த்துள்ளனர்.அங்கே அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதாவது, ஃப்ரிட்ஜ்க்குள் ஜாகீரின் உடல் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ந்து போயுள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், குற்றவாளிகள் யார் என்பதை அறியவும் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.
இதன் பின்னர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், ஜாகீரின் தம்பி அபித் மற்றும் அவரது நண்பர் ஜாஹித் ஆகிய இருவர், ஜாகீரை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. சுத்தியல் ஒன்றின் மூலம், ஜாகீர் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் அபித் மற்றும் ஜாஹித் ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஜாகீரிடம் இருந்த பணம் மற்றும் நகை ஆகியவற்றை திருடுவதற்காக தான், அவர்கள் இப்படி செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியல் மற்றும் பணம், நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தனது மனைவிகள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த ஜாகீர், தனியாக வசித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜாகீர் போன்ற ஒரு சிறந்த மனிதர் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியாக இருப்பதாகவும், கொஞ்சம் கூட இதனை நம்பவே முடியவில்லை என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Also Read | கள்ளக்குறிச்சி: நல்லடக்கம் செய்யப்பட்டது மாணவியின் உடல்... கண்ணீரில் மூழ்கிய பெரியநெசலூர் கிராமம்..!
மற்ற செய்திகள்