"கடையில இருந்த நகை எல்லாம்... அந்த 'பொண்ணு' ஆட்டைய போட்ருச்சு சார்..." - ஆனா, சிசிடிவி பாத்த போலீசாருக்கு காத்திருந்த SHOCKING 'ட்விஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியின் சந்தினி மஹால் என்னும் பகுதியில் அமைந்துள்ள, நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊரடங்கு காரணமாக பெரிதும் வியாபாரம் சரியாக நடைபெறாத காரணத்தினால், கடையின் உரிமையாளரான அபிஜீத் சமந்தா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அது மட்டுமில்லாமல் பிசினஸ் லோனாக 61 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். வியாபாரம் இல்லாத காரணத்தால், மாதந்தோறும் EMI கட்ட முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், கடையில் கொள்ளை போனது போல நாடகமாடினால், EMI கட்ட வேண்டாம் என்றும், இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்றும் நினைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது நண்பர்களான முன்னா மற்றும் பர்கான் ஆகியோருடன் இணைந்து கொள்ளை போனது போல நாடகமாடினர். போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணத்தையும் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் திருடிச் சென்றதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளில் பர்தா அணிந்த பெண் வருவதற்கு முன் அபிஜீத், கடையின் வாசலில் அந்த பெண் எப்போது வருவார் என காத்திருந்தது போல தெரிந்தது. அதே போல, அபிஜீத் அந்த பெண் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும், கட்டிப் போட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், அப்படி எதுவும் சிசிடிவி காட்சிகளில் இல்லை.
இதனைத் தொடர்ந்து, அபிஜீத்திடம் ஆறு மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொள்ளையடிப்பது போல நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். மேலும் அவரது நண்பர் முன்னா தான் பர்தா அணிந்து கொண்டு பெண் போல வந்ததையும் அவர் தெரிவித்தார். கொள்ளையடித்தது போல நாடகமாடிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மற்ற செய்திகள்