Darbar USA

“எவ்வளவோ முயற்சி பண்ணோம்”.. “எங்களால பாதுகாப்பு வழங்க முடியல!”.. ஜே.என்.யு விடுதி வார்டன் எடுத்த “அதிரடி முடிவு”!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முகத்தை மூடிக்கொண்டு வந்து, நேற்று (ஜனவரி 5-ஆம் தேதி) மாலை, மாணவர்களை தாக்கிய நபர்களால் பல்கலைக் கழகமே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

“எவ்வளவோ முயற்சி பண்ணோம்”.. “எங்களால பாதுகாப்பு வழங்க முடியல!”.. ஜே.என்.யு விடுதி வார்டன் எடுத்த “அதிரடி முடிவு”!

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பல்கலைக் கழகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி பேசிய மாணவர் அமைப்பின் தலைவர்  அய்ஷி கோஷ், குச்சிகளையும், கற்களையும் கொண்டு தாங்கள் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மாணவ செயற்பாட்டாளர் பிரியதர்ஷினி, மாணவிகளின் மீதும் மோசமான வன்முறைகள் கையாளப்பட்டதாகவும், கீழ்த்தரமான வார்த்தைகள் பிரயோகப்படுத்தப்பட்டதாகவும், அடித்துத் துன்புறுத்தி அவமானப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முகமூடி அணிந்த மர்ம நபர்களால் கொடூரமாக, தான் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அய்ஷி கோஷி, தன் முகத்தில் ரத்தம் வழிவதாகவும், மண்டையை உடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பெரிய பெரிய கற்கள் வீசியதாகவும் கூறியுள்ளார்.

விடுதி கட்டண உயர்வு மற்றும் தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக ஜே.என்.யு மாணவர்கள் 70 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் நடந்துள்ள இந்த வன்முறைச் சம்பவம் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜனவரி 6-ஆம் தேதி காலை முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து,  டெல்லி  காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வளவோ முயற்சி செய்தும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்பதால், சபர்மிதி விடுதியின் மூத்த வார்டன் பதவியில் ராஜினாமா செய்வதாக மூத்த விடுதி வார்டன் மீனா ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

DEHI, JNUATTACK, JNUUNDERATTACK