’ஒரே ஒரு ’வாட்ஸ்ஆப்’ மெசேஜில்... '84 நர்ஸ்களை ’வேலையை’ விட்டு தூக்கிய மருத்துவமனை...!' இந்த மாதிரி நேரத்துல ஏன் தூக்கினாங்க...? - அதிர்ச்சியில் செவிலியர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தலைநகர் டெல்லியில் செயல்படும் HAHC மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 84 செவிலியர்களை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’ஒரே ஒரு ’வாட்ஸ்ஆப்’ மெசேஜில்... '84 நர்ஸ்களை ’வேலையை’ விட்டு தூக்கிய மருத்துவமனை...!' இந்த மாதிரி நேரத்துல ஏன் தூக்கினாங்க...? - அதிர்ச்சியில் செவிலியர்கள்...!

டெல்லியில் ஹம்டார்ட் நகரில் செயல்படும் ஹக்கீம் அப்துல் ஹமீத் நூற்றாண்டு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்த சம்பவம் போராட்டத்தையே உருவாக்கியுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் சங்கம் உறுப்பினர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு டெல்லி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, பெரும்பாலான செவிலியர்கள் தங்களின் பணிநீக்கக் கடிதம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாட்ஸ்அப் குழுவில் கிடைத்ததாக கூறியுள்ளனர். மேலும் கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்கள், தங்களின் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகள், முகமூடிகள் மற்றும் குடிநீர் ஆகிய அத்தியாவசிய தேவைகளை கேட்டதால் தான் இவ்வாறு தீடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா  வார்டில் பணி செய்து வைரஸ் பாதிக்கப்பட்ட செவிலியர்களும் பரிசோதனைக்காக பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கூறிய செவிலியர்களில் ஒருவர், 'நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். எனக்கும் பணிநீக்க கடிதம் கிடைத்தது. நான் கொரோனா வார்டில் பணிபுரியும் போது, ஒரு நாளில் சுமார் 12-14 மணி நேரம் வேலை செய்தேன். மருத்துவமனை நிர்வாகம் எங்களை நிறுத்த விரும்பினால், எங்கள் ஒப்பந்தம் முடிந்ததும் அவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தம் முடிந்த பிறகும் எங்களை பணி செய்யுமாறு கேட்டனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாங்களும் அதை ஏற்று எங்களின் பணியை தொடர்ந்தோம். இப்போது அடிப்படை வசதிகளைக் கேட்டதால் தற்போது எங்களை பணிநீக்கம் செய்துள்ளனர்' எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், டில்லி-என்.சி.ஆர் ஐக்கிய செவிலியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜொல்டின் பிரான்சிஸ், செவிலியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.

மேலும், 'எங்களின் பணிநேரத்தில் கொரோனா வார்டில் கிழிந்த ஸ்க்ரப்ஸை அணிவோம். செவிலியர்களுக்கு N-95 மாஸ்க் கொடுக்காமல், அறுவை சிகிச்சை முகமூடிகளை ஒரு நாளைக்கு 5 முறை என சுமார் 25 நாட்களுக்கு வழங்கப்பட்டன' என மற்றொரு செவிலியர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்